கொரோனா லாக்டவுன் காலமாக நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சிறுத்தை சிவாவின் அண்ணாத்த பட ஷூட்டிங் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, மீனா, குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் தனிவிமானம் மூலமாக சென்னை டூ ஐதராபாத் பறந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த பட ஷூட்டிங் நடைபெற்றது வந்தது. ஜனவரி மாதம் அரசியல் கட்சி துவங்குவதால் ரஜினி தினமும் 14 மணிநேரம் நடித்து வந்தார்.
கொரோனா பரவல் காரணமாக நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்கள் உட்பட ஒட்டுமொத்த அண்ணாத்த படக்குழு மொத்தமும் பயோ பபுளுக்குள் இருந்து வந்தனர். அந்த பயோ பபுளில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்களுக்கு அந்த ஓட்டல், படப்பிடிப்பு தளத்திற்குள் நுழைய அனுமதி கிடையாது. அதேபோல் பயோபபுளில் இருப்பவர்கள் யாரும் வெளியேபோய்விட்டு மீண்டும் உள்ளே நுழையவும் முடியாது என உச்சகட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே ஷூட்டிங்கில் பங்கேற்ற 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அண்ணாத்த பட ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
வாரத்திற்கு ஒருமுறை அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 4 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் ரிசல்ட் என வந்தது ரசிகர்களின் பதற்றத்தை தனித்தது.
இதனிடையே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நேற்றே அவசர அவசரமாக ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். காதலர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா ஐதராபாத் விமான நிலையம் வந்த போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது
காத்து வாக்குல இரண்டு காதல் படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் இருந்த விக்னேஷ் சிவன் அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவிய செய்தியை அறிந்து நயனை பத்திரமாக சென்னை அழைத்து வந்துள்ளார்.
இருப்பினும் நயன்தாரா ஐதராபாத்திலேயே குவாரண்டைன் செய்து கொள்ளாமல் ஏன் சென்னை வந்தார் ? என ரசிகர்கள் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கோலிவுட்டின் பல படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.