ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில்... தற்போது ஆர்த்தி சமாதான கொடி காட்டும் விதத்தில், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆர்த்தியின் இந்த அறிக்கையில் ஜெயம் ரவியுடன் சேர்ந்து வாழவே விரும்புவதாக தெரிவித்துள்ளார். ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார். நான் தனிப்பட்ட பேச்சுவாந்தாரிக்கு தயார் என்றேன். ஆனால் விவாகரத்துக்கு சம்மதிக்கவில்லை. எனது குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் என்பது போன்றும். சட்ட ரீதியாக தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஆர்த்தி கூறியுள்ளார்.
இந்த அறிக்கையில், “என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு, என் மௌனம் வெளிப்பாடாக இருப்பது... என்னுடைய பலவீனமோ, அல்ல குற்ற உணர்ச்சியோ அல்ல. என்னுடைய சுயமரியாதையை கடைபிடிக்கிறேன். உண்மையை மறைக்க விரும்பி, என்னை மோசமாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு பதிலளிப்பதை தவிர்ப்பதற்காகவே மெளனமாக இருக்கிறேன். அதே நேரம் நீதித் துறை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
ஒருமனதாக விவாகரத்து பெற்றதாக வெளியான அறிவிப்பை கண்டு அதிர்ச்சி அடைந்து, ஒரு தலைபட்சமாக இது நடக்கிறது என்பதை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் தனிப்பட்ட உரையாடலை நான் எதிர்பார்க்கிறேன். ஆனால், இன்று வரை அது மறுக்கப்படுகிறது. திருமணத்தின் புனிதத்தன்மையை நான் ஆழமாக மதிக்கிறேன். யாருடைய நற்பெயரையும் புண்படுத்தும் பொது விவாதங்களில் ஈடுபடமாட்டேன். கடவுளும் என்னை ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன் என ஆர்த்தி எமோஷ்னலாக பேசியுள்ளார். ஆர்த்தி மீண்டும் ஜெயம் ரவிக்கு சமாதான கொடி காட்டியுள்ளதால், பிள்ளைகளுக்காக மீண்டும் ஜெயம் ரவி ஆர்த்தியுடன் வாழ சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.