பெண் இயக்குநர்கள் படத்தில் இனி இதை ஃபாலோ செய்வேன்! நெஞ்சை தொட்ட ஜெயம் ரவியின் பேச்சு!

Published : Jan 11, 2025, 05:07 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14-ஆம் தேதி ரிலீஸ் அகவுள்ள, காதலிக்க நேரமில்லை படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி, இனி பெண் இயக்குனர்கள் படங்களில் இந்த ஒரு விஷயத்தை ஃபாலோ செய்ய போகிறேன் என தெரிவித்துள்ளார்.  

PREV
15
பெண் இயக்குநர்கள் படத்தில் இனி இதை ஃபாலோ செய்வேன்! நெஞ்சை தொட்ட ஜெயம் ரவியின் பேச்சு!
Krithika Udhayanidhi

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. வித்தியாசமான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாகவும் - நித்தி,  நித்யா மேனன் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், ஜெயம் ரவி மிகவும் மெச்சூர்டாக பேசியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

25
Vinay Speech

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் வினய், "இயக்குனர் கிருத்திகா இந்த படத்தில் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரத்தை கொடுத்துள்ளார். முதல் முறையாக நான் ஒரு பெண் இயக்குனர் படத்தில் நடித்துள்ளேன். அவரின் இயக்கும் திறமையை கண்டு வியப்படைந்தேன். ஒட்டு மொத்த செட்டையே அவர் கண்ட்ரோலில் வைத்திருந்ததை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த அனுபவம், ஏ.ஆர்.ரகுமானின் இசை குறித்து தன்னுடைய கருத்தை பகிர்ந்து கொண்டார்.

எதிர்பாராத எலிமினேஷன்; டைட்டில் வின்னர் கனவோடு இருந்தவரை கண்ணீரோடு வெளியேற்றிய பிக்பாஸ்!

35
Nithya Menen About Krithika

நடிகை நித்தியா மேனன்,  "எப்போதும் நான் கதை கேட்கும் போது, இயக்குனர் சொல்லும் கதை அப்படியே படமாக எடுக்க முடியுமா என நினைப்பேன். ஆனால் இந்த படம் அப்படியே படமாக வந்துள்ளது. கிருத்திகா இயக்குனர் மட்டும் அல்ல, ஒரு சிறந்த தோழி போல் பழகினார். திரைக்கதை மற்றும் இயக்கத்தில் கலக்கியுள்ளார். இப்படத்தில் பணியாற்றிய அனைவரும் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பழகினார்கள். கிருத்திகா ஒவ்வொரு காட்சியையும் அற்புதமாக கையாண்டுள்ளார். எனக்கு இந்த படம் மிகவும் பிடித்துள்ளது, அதே போல் உங்களுக்கு பிடிக்கும் என தெரிவித்தார்.

45
Jayam Ravi Emotional

நடிகர் ஜெயம் ரவி பேசும் போது... மிகவும் எமோஷனலாக இருந்தார். " இந்த டீமுடன்,  வேலை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தில், பலர் என்னிடம் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் வருகிறது என கேட்டார்கள், அதுக்கு காரணம் என் மீதுள்ள கான்ஃபிடண்ட் தான்.  

மூன்றே மாதத்தில் அஜித் 25 கிலோவுக்கு மேல் எடையை குறைத்து எப்படி? டயட் சீக்ரெட்டை பகிர்ந்த பிரபலம்!

55
Bold Decision:

ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை. இனி எந்த பெண் இயக்குனர் படத்தில் நடித்தாலும் இதையே தான் பின்பற்ற போகிறேன். என் திரையுலக வாழ்க்கையில், எனக்கு பல கஷ்டமான காலங்கள் இருக்கிறது. நான் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை,  அப்போதெல்லாம் நான் என்ன தவறு செய்தேன் என யோசித்திருக்கிறேன். எந்த ஒரு தவறும் நான் செய்யாத போது ஏன் வருத்தப்பட வேண்டும் என நினைத்து மீண்டும் எழுந்துள்ளேன். இந்த ஆண்டு அடுத்தடுத்து என் நடிப்பில் நல்ல படங்கள் வர உள்ளது என பேசியுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories