தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தமிழில் கனெக்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், O2 போன்ற படங்களும் தெலுங்கில் காட்பாதர் படத்திலும், மலையாளத்தில் கோல்டு, பாட்டு போன்ற படங்களிலும், இந்தியில் அட்லி இயக்கும் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது மேலும் ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார். அப்படத்தை ஜீவா நடித்த என்றென்றும் புன்னகை, உதயநிதியின் மனிதன் போன்ற படங்களை இயக்கிய அஹமத் இயக்க உள்ளார். இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளாராம்.
நடிகை நயன்தாரா ஏற்கனவே ஜெயம் ரவிக்கு ஜோடியாக தனி ஒருவன் படத்தில் நடித்திருந்தார். அப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி செம்மையாக ஒர்க் அவுட் ஆனதால் இப்படத்தில் அவர்கள் இருவரையும் மீண்டும் ஜோடி சேர்த்து உள்ளதாக இயக்குனர் அஹ்மத் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “ஜெயம் ரவியை வைத்த நான் இயக்கும் ‘ஜன கன மன’ திரைப்படத்தின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் தற்போது அங்கு போக முடியவில்லை. நிலைமை சீராகும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளோம்.