Kavin New Movie : புது படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் கவின்... அதுவும் ‘பீஸ்ட்’ பட நடிகையுடன் டூயட் பாட போறாராம்

Ganesh A   | Asianet News
Published : Mar 07, 2022, 09:06 AM IST

Kavin New Movie : நடிகர் கவின் தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்க உள்ளார்.

PREV
15
Kavin New Movie : புது படத்தில் கமிட் ஆன பிக்பாஸ் கவின்... அதுவும் ‘பீஸ்ட்’ பட நடிகையுடன் டூயட் பாட போறாராம்
AK61 update

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற கவினுக்கு ஏராளமான ரசிகர்களும் கிடைத்தனர்.

25

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினின் கெரியர் மளமளவென உயர்ந்தது. இவர் நடிப்பில் கடந்தாண்டு லிப்ட் திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. இதையடுத்து ஊர்க்குருவி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் கவின்.

35

ஊர்க்குருவி படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து தயாரித்து உள்ளனர். இதுதவிர இவர் நடிப்பில் அண்மையில் ஆகாஷ்வாணி என்கிற வெப் தொடரும் வெளியானது. ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசான இந்த தொடரும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

45

இந்நிலையில், நடிகர் கவின் தற்போது மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அறிமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்க உள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார். இவர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

55

இப்படம் மூலம் நடிகை அபர்ணா தாஸ் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். பீஸ்ட் படத்தில் நடிகர் கவின் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அப்போது அபர்ணா தாஸின் நடிப்பை பார்த்து வியந்துபோன் கவின், தனது படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க சிபாரிசு செய்ததாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்.... Sathyaraj Speech : 25 நடிகைகளை கல்யாணம் பண்ணிருக்கேன்... அப்போ அதெல்லாம் என்ன சொல்றது - சத்யராஜ் பேச்சு

click me!

Recommended Stories