தியேட்டரில் ஓடாத ஜெயம் ரவியின் பிரதர் – ஓடிடியில் சக்கை போடு போட்டு சாதனை!

First Published | Dec 17, 2024, 10:21 AM IST

Brother Creates Record in OTT : ஜெயம் ரவி நடிப்பில் வந்த பிரதர் படம் ஓடிடியில் வெளியாகி பல சாதனைகளை படைத்து வருகிறது.

Brother Movie OTT Release

Brother Creates Record in OTT : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமரன், பிரதர், பிளடி பெக்கர் உள்ளிட்ட படங்கள் திரைக்கு வந்தன. ஆனால், மறைந்த தமிழக வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அமரன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில் மற்ற படங்களான பிரதர் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே போதுமான அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

Brother Movie OTT Release

மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார். அதோடு, இராணுவ வீரராகவும் கலக்கியிருந்தார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இதுவரையில் சிவகார்த்திகேயனின் எந்த படமும் ரூ.200 கோடிக்கு அதிகமாக வசூல் குவிக்காத நிலையில் அமரன் படம் அந்த சாதனையை படைத்தது. இந்திய அளவில் ரூ.217 கோடி கொடுத்த அமரன் உலகளவில் ரூ.328 கோடி வசூல் குவித்து சாதனை படைத்தது.

Tap to resize

Brother Movie OTT Records

எதிர்மறை விமர்சனத்தையே இந்தப் படம் கொடுக்கவில்லை. அந்தளவிற்கு ரசிகர்கள் அமரன் படத்தை மட்டுமின்றி சிவகார்த்திகேயனையும் கொண்டாடினார்கள். இதன் காரணமாக ஜெயம் ரவியின் பிரதர் படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. நல்ல கதை, குடும்பத்தோடு பார்க்க வேண்டிய அருமையான படம்.

Jayam Ravi Brother Movie OTT Release

ஈகோ மற்றும் விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை உள்ளிட்டவற்றை மையப்படுத்தி இந்தப் படம் திரைக்கு வந்தது. இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார். மேலும், பூமிகா சாவ்லா, நடராஜன் சுப்பிரமணியம், ராவ் ரமேஷ், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

Brother Movie

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி திரைக்கு வந்த பிரதர் படத்திற்கு திரையரங்குகளில் மோதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், வெளியாகி ஒரு மாசத்தில் ஜீ5 ஓடிடி தளத்தில் பிரதர் படம் வெளியானது. திரையரங்கில் கிடைக்காத வரவேற்பு ஓடிடியில் கிடைத்து வருகிறது. பிரதர் படம் வெளியான சில வாரங்களுக்குள்ளாக 100 மில்லியன் நிமிடங்களை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.

Jayam Ravi Upcoming Movies

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் ஜெனி, காதலிக்க நேரமில்லை ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதே போன்று இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும், டாடா பட இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் உருவாகி ஜெயம் ரவியின் 34ஆவது படத்திலும் நடிக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக தமிழக டிஜிபியான சங்கர் ஜிவாலின் மகளான தவ்தி ஜிவால் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!