4 ஹிட் 18 பிளாப்... அதிர்ச்சி அளிக்கும் கோலிவுட்டின் ஜனவரி மாத ரிப்போர்ட்..!

Published : Feb 02, 2026, 04:16 PM IST

2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் கோலிவுட்டுக்கு ஒரு மோசமான அனுபவத்தையே கொடுத்திருக்கிறது. கடந்த மாதம் மொத்தம் வெளியான 22 படங்களில் 18 படங்கள் தோல்வியை சந்தித்து உள்ளன.

PREV
15
Kollywood Box Office Report

2025-ஐ போலவே, 2026ஆம் ஆண்டும் தமிழ் சினிமாவில் படங்களின் எண்ணிக்கையில் சாதனை படைக்கப் போகிறது என்பதற்கான ஆரம்ப சைகைகளை ஜனவரி மாதமே காட்டிவிட்டது. ஜனவரி மாதம் இறுதியில் வெளியான ‘க்ரானி’, ‘கருப்பு பல்சர்’, ‘காந்தி டாக்ஸ்’, ‘லாக் டவுன்’, ‘மெல்லிசை’, ‘திரைவி’, ‘ராட்டா’ ஆகிய படங்களையும் சேர்த்தால், கடந்த மாதத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 22 ஆக உயந்துள்ளது.

கடந்த 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 26 படங்கள் வெளியான நிலையில், இந்த ஆண்டு எண்ணிக்கையில் சிறிய குறைவு இருந்தாலும், வாரத்திற்கு சராசரியாக 4க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியிருப்பது தயாரிப்பாளர்களின் ஆர்வத்தையும், வெளியீட்டு போட்டியையும் வெளிப்படுத்துகிறது.

25
100 கோடி வசூல் அள்ளிய பராசக்தி

2026 ஜனவரியில் வெளியான முதல் படம் ‘சல்லியர்கள்’; இந்த படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக OTT Plus தளத்தில் வெளியானது. அதனைத் தொடர்ந்து, ‘அனந்தா’ திரைப்படம் ஜனவரி 13ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகியது.

பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி வரவிருந்த ‘ஜனநாயகன்’ படம், நீதிமன்ற வழக்கு காரணமாக திடீரென ஒத்திவைக்கப்பட்டது. இந்த படம் எப்போது வெளியாகும் என்பது, புரியாத புதிராகவே உள்ளது. அதே நேரத்தில், பொங்கலுக்கு வெளியான ‘பராசக்தி’ திரைப்படம் 2026ஆம் ஆண்டின் முதல் 100 கோடி வசூல் படமாக மாறி பெரும் கவனம் பெற்றுள்ளது.

35
சர்ப்ரைஸ் ஹிட்டான ஜீவா படம்

குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படம் சுமார் 10 கோடி செலவில் உருவாகி, 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், படத்தை வாங்கிய அனைவருக்கும் லாபம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, பொங்கல் வெளியீடுகளில் ஒன்றான ‘வா வாத்தியார்’ திரைப்படம், நடிகர் கார்த்தியின் திரைப்பயணத்தில் எதிர்பாராத தோல்வியாக அமைந்தது.

45
தப்பித்த ஹாட் ஸ்பாட் 2

ஜனவரி 23ஆம் தேதி வெளியான படங்களில் ‘திரௌபதி 2’ திரைப்படம், ஓரளவு வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதே நேரத்தில் ‘மங்காத்தா’ படம் ரீ ரிலீஸ் ஆனதால், கவனம் முழுவதும் அதன்பக்கம் திரும்பிவிட்டதாக இயக்குநர் மோகன்ஜி வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிடும் நிலை ஏற்பட்டது. ரிலீஸ் ஆன ஒரே வாரத்தில் திரெளபதி 2 திரைப்படம் வாஷ் அவுட் ஆனது. இதற்கு போட்டியாக வந்த ஹாட்ஸ்பாட் 2 திரைப்படம் முதலுக்கு மோசமின்றி தப்பித்தது. அதன்பின்னர் ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் காந்தி டாக்ஸ், லாக்டவுன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. அதற்கும் பெரியளவில் ரெஸ்பான்ஸ் இல்லை.

55
கோலிவுட் ரிப்போர்ட்

இதன்மூலம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆன 22 படங்களில் பராசக்தி, தலைவர் தம்பி தலைமையில், மங்காத்தா ரீ-ரிலீஸ், ஹாட் ஸ்பாட் 2 ஆகிய 4 படங்கள் தான் ஹிட் லிஸ்டில் இணைந்துள்ளன. மற்ற 18 படங்களும் பிளாப் ஆகி உள்ளன. இப்படி சர்ச்சைகள், எதிர்பாராத வெற்றிகள், ஏமாற்றங்கள் என கலவையான மாதமாகவே ஜனவரி அமைந்திருக்கிறது. பிப்ரவரி மாதத்திலும் பல சிறிய படங்கள் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. சில படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் முழுவதும் ஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மீது தான் உள்ளது. ஏனெனில் அப்படம் இம்மாதம் ரிலீஸ் ஆகாவிட்டால் எலெக்‌ஷன் முடியும் வரை திரைக்கு வர வாய்ப்பே இல்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories