ரீ-ரிலீஸில் கில்லியிடம் தோற்றுப்போன மங்காத்தா... பாக்ஸ் ஆபிஸ் ஆட்டம் ஓவர் - ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?

Published : Feb 02, 2026, 02:40 PM IST

அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆன சில நாட்கள் கோடி கோடியாய் வசூலை வாரிக்குவித்த நிலையில், 10 நாட்களிலேயே அப்படத்தின் ஓட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

PREV
15
Mankatha vs Ghilli Re Release Box Office

இந்திய சினிமாவில் சமீபகால மறு வெளியீடு ஒரு புதிய டிரெண்டாக உள்ளது. வெளியான காலத்தை விட, மீண்டும் திரையரங்குகளுக்கு வரும்போது அதிக வரவேற்பு கிடைக்கிறது. அந்த வரிசையில் அஜித் குமார் நடித்த மங்காத்தா படமும் மீண்டும் திரையரங்குகளுக்கு வந்துள்ளது. மறு வெளியீட்டின் முதல் நாளில், விஜய்யின் கில்லியைப் பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாட்டில் மட்டும் மங்காத்தா ரூ.3.75 கோடி வசூலித்தது. விஜய் நடித்த கில்லி ரூ.3.50 கோடி வசூலித்திருந்தது.

25
மங்காத்தா ரீ ரிலீஸ் வசூல்

இந்தியாவில் இருந்து மங்காத்தா ரூ.4.1 கோடியும் வசூலித்தது. கில்லி ரூ.4 கோடி வசூலித்திருந்தது. இதற்கு முன்பு வரை, மறு வெளியீட்டில் அதிக முதல் நாள் வசூல் செய்த தமிழ்ப் படம் கில்லி தான்.அந்த சாதனையை அஜித் இப்போது தன் வசப்படுத்தியுள்ளார். ஆனால், வார இறுதி வசூலைக் கணக்கிடும்போது, கில்லிக்குப் பின்னால் இரண்டாவது இடத்தில் மங்காத்தா உள்ளது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் முதல் வாரத்தில் மங்காத்தா ரூ.14.8 கோடி வசூலித்தது. கில்லி முதல் வாரத்தில் ரூ.25 கோடி வசூலித்திருந்தது. மறு வெளியீட்டில் 10 நாட்கள் கடந்த நிலையில், மங்காத்தா மொத்தமாக ரூ.15.65 கோடி மட்டுமே வசூலித்துள்ளது.

35
முடிவுக்கு வந்த மங்காத்தா ஆட்டம்

அஜித்தின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக மங்காத்தா கருதப்படுகிறது. மங்காத்தா 2011-ல் மொத்தமாக ரூ.74.25 கோடி வசூலித்ததாக கூறப்படுகிறது. மீண்டும் மங்காத்தா ஜனவரி 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. ஆரம்பத்தில் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் போகப் போக கூட்டம் கம்மியானதால் வசூலும் மளமளவென சரிந்தது. இதனால் கில்லி ரீ-ரிலீஸ் வசூல் சாதனையை முறியடிக்க முடியாமல் முடிவுக்கு வந்துள்ளது மங்காத்தா ஓட்டம்.

45
மங்காத்தா பட்ஜெட் எவ்வளவு?

அஜித்தின் மங்காத்தா ரூ.24 கோடி பட்ஜெட்டில் உருவானதாக அன்றைய செய்திகள் கூறுகின்றன. அஜித் நடித்த மங்காத்தா படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை சக்தி சரவணன் செய்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மங்காத்தாவில் அர்ஜுன், த்ரிஷா, அஞ்சலி, வைபவ், ஆண்ட்ரியா, அஷ்வின், பிரேம்ஜி அமரன், மஹத் ராகவேந்திரா, அரவிந்த் ஆகாஷ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

55
அஜித்தின் அடுத்த படம்

அஜித் நடிப்பில் அடுத்ததாக ஏகே 64 திரைiப்படம் உருவாக உள்ளது. அப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்க உள்ளது. அப்படம் ஹார்பரை பின்னணியாக கொண்டு உருவாக இருக்கிறது. அப்படத்தில் நடிகர் அஜித்துடன் நடிக்க உள்ள நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தீபாவளிக்கு ஏகே 64 திரைப்படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர். அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories