தங்கத் தாமரை மகளே... சேலையில் கோல்டன் ஏஞ்சலாக மிளிரும் ஜான்வி கபூர்..!

Published : Sep 02, 2025, 04:02 PM IST

நடிகை ஜான்வி கபூர் கோல்டன் நிற சேலையில் அழகு தேவதையாக மிளிரும் புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் படு வைரல் ஆகி வருகின்றன.

PREV
17
Janhvi Kapoor Saree Photoshoot

நடிகை ஸ்ரீதேவியை போல் அவரது மகள் ஜான்வி கபூரும் பான் இந்தியா அளவில் கலக்கி வருகிறார். ஜான்வி கபூர் கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன தடக் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கோஸ்ட் ஸ்டோரீஸ், குஜன் சக்சேனா போன்ற பாலிவுட் படங்களிலும் ஜான்வி கபூர் நடித்தார்.

27
ரீமேக் நாயகி

தமிழ் மற்றும் தென்னிந்திய மொழிகளில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படங்களை இந்தியில் ரீமேக் செய்து நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ஜான்வி கபூர், அந்த வகையில் கோலமாவு கோகிலா ரீமேக் ஆன குட்லக் ஜெர்ரி, அன்பிற்கினியாள் படத்தின் ரீமேக் ஆன மில்லி போன்ற படங்களில் நடித்தார்.

37
பான் இந்தியா ஹீரோயின்

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த ஜான்வி கபூர், கடந்த ஆண்டு வெளியான தேவரா படம் மூலம் பான் இந்தியா நாயகி ஆனார். அப்படத்தில் ஜுனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ஜான்வி கபூர். அப்படமும் ஹிட் ஆனது.

47
பரம சுந்தரி

இந்தியில் நடிகை ஜான்வி கபூர் நடித்த பரம சுந்தரி திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தில் சித்தார்த் மல்கோத்ராவுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ஜான்வி கபூர். ஏஐ மூலம் வருங்கால மனைவியை தேடும் வட இந்திய இளைஞனுக்கு கேரள பெண்ணான ஜான்வி கிடைக்கிறார். அதன்பின் என்ன ஆனது என்பதே இப்படத்தின் கதை.

57
அடுத்த படம்

நடிகை ஜான்வி கபூர் அடுத்ததாக பெத்தி என்கிற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடிக்கிறார். புச்சி பாபு சனா இயக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஜான்வி. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

67
இன்ஸ்டா குயின்

நடிகை ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமிலும் செம ஆக்டிவாக இருந்து வருகிறார். அதில் அவ்வப்போது விதவிதமான ஆடைகளில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

77
சேலையில் மிளிரும் ஜான்வி

அந்த வகையில் கோல்டன் நிற சேலையில், தங்கத் தாமரையாக ஜொலித்தபடி நடிகை ஜான்வி கபூர் நடத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories