திரைப்பிரபலங்கள் சமூக வலைதளங்களில் எது செய்தாலும் அது டிரெண்டாகி விடும் அல்லது சர்ச்சையாகிவிடும். அந்த வகையில் பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ ஒன்றை லைக் செய்துள்ளார். அது குறித்து தற்போது நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். மறைந்த ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் ஆகிய இருவரையும் ஒப்பிட்டு வெளியான வீடியோவை ஜான்வி கபூர் லைக் செய்து இருப்பதற்கு ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.
25
மாதுரியை விமர்சித்து வெளியான ரீல்ஸ்
அந்த வீடியோவில் திரை இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு புறத்தில் ‘பீட்டா’ திரைப்படத்தில் வரும் மாதிரி தீட்சித்தின் பிரபல நடனக் காட்சியான “தக் தக் கர்னே லகா..” பாடல் ஒளிபரப்பாகிறது. அதற்கு கீழே, “இது ஒரு மோசமான நடனம், அசிங்கமான அசைவுகள், படத்தில் எதுவுமே செய்யாமல் ஃபிலிம் பேர் நடிகைக்கான விருதை வென்றுவிட்டார்” என வரிகள் வருகிறது. திரையின் மற்றொரு புறத்தில் ஸ்ரீதேவி ‘குதா கவா’ படத்தில் நடித்த காட்சிகள் ஒளிபரப்பாகிறது. அதில், “ஸ்ரீதேவி சிறந்த நடிப்பை வழங்கிய போதிலும் புறக்கணிக்கப்பட்டார்” என்று அந்த வாசகம் கூறுகிறது.
35
ஃபிலிம்பேர் விருதை இழந்த ஸ்ரீதேவி
1992-ம் ஆண்டு வெளியான ‘குதா கவா’ படத்தில் ஸ்ரீதேவி அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இரட்டை வேடத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இடைவேளைக்கு பின்னர் முழு படத்தையும் ஸ்ரீதேவி தங்கியிருந்தார். அவர் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய போதிலும் விருது கிடைக்கவில்லை. மாதுரி தீட்சித் நடித்த ‘பீட்டா’ திரைப்படமும், ஸ்ரீதேவியின் ‘குதா கவா’ திரைப்படமும் ஃபிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், இறுதியில் மாதுரி தீட்சித் விருதை வென்றிருந்தார்.
45
சர்ச்சை வீடியோவை லைக் செய்த ஜான்வி கபூர்
இந்த நிலையில் மாதுரி தீட்சித் மற்றும் ஸ்ரீதேவி இருவரையும் ஒப்பிட்டு, மாதுரி தீட்சித்தை விமர்சித்து இருக்கும் ரீல்ஸை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் லைக் செய்துள்ளார். ஜான்வி கபூரின் இந்த செயலை விமர்சித்தும், ஆதரவாகவும் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். சிலர் மாதுரி நடிப்பை ஆதரிக்கின்றனர். மற்றவர்கள் ஸ்ரீதேவி குறைவாக பாராட்டப்பட்டதாக கருதுகின்றனர். சில ஸ்ரீதேவி தென்னிந்தியர் என்பதால் புறக்கணிக்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்தையும் கூறி வருகின்றனர்.
55
ஜான்வியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
இன்னும் சிலரோ ஜான்வி கபூர் இன்ஸ்டாகிராம் அல்காரிதம் குறித்த கதையை கொண்டு வருவார் என்றும், இந்த ரீல்ஸை நான் லைக் செய்யவில்லை, அது தற்செயலாக நடந்து விட்டது என சில நாட்களுக்கு பின்பு ஜான்வி கபூர் விளக்கம் அளிக்கக்கூடும் என்றும் கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.