Janhvi Kapoor: தடக் ஹிட்டானாலும் மன அழுத்தத்தில் இருந்தேன் - ஜான்வி கபூர் ஓபன் டாக்: முதல் படத்தின் போது நடந்த சோகம்!

Published : Apr 10, 2026, 08:03 PM IST

Janhvi Kapoor Emotional Talk Dhadak : தன்னுடைய முதல் படமான 'தடக்' வெற்றி பெற்றாலும், மன அழுத்தத்தில் இருந்ததாக நடிகை ஜான்வி கபூர் கூறியுள்ளார். தன்னம்பிக்கை இன்மை மற்றும் தனிப்பட்ட இழப்பு என பல சவால்களை சந்தித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

PREV
14
ஜான்வி கபூர் உருக்கமான பேட்டி

2018-ல் 'தடக்' திரைப்படம் மூலமாக ஜான்வி கபூர் பாலிவுட்டில் அறிமுகமானபோது, அது மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்தது. ஆனால், ஒரு அறிமுக நடிகைக்குக் கிடைக்க வேண்டிய அந்த மகிழ்ச்சி ஜான்விக்குக் கிடைக்கவில்லை. "படம் ஜெயித்தது உண்மைதான், ஆனால் மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்களா? என் நடிப்பு அவர்களுக்குப் பிடித்திருக்கிறதா? என்ற கேள்விகள் என்னை ரணமாக்கின. பாசிட்டிவ் கமெண்ட்டுகளை விட, என்னைச் சிதைத்த நெகட்டிவ் விமர்சனங்களைத்தான் நான் அதிகம் பிடித்துத் தொங்கினேன்," என ஜான்வி சமீபத்திய பேட்டியில் உடைந்து போயுள்ளார்.

24
ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்

தாயின் மறைவும்.. தீராத தனிமையும்: 'தடக்' ரிலீசுக்குச் சில மாதங்களுக்கு முன்பு இந்தியத் திரையுலகின் கனவுக்கன்னி ஸ்ரீதேவி காலமானார். தனது ஒவ்வொரு அசைவிற்கும் தாயின் அங்கீகாரத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த ஜான்விக்கு, அந்த வெற்றிடம் மிகப்பெரிய மன அழுத்தத்தை (Depression) உண்டாக்கியது.

34
ஏக்கத்தின் வெளிப்பாடு:

அம்மாவின் பாராட்டிற்குப் பதில், ரசிகர்களின் பாராட்டைப் பெற ஏங்கினேன். ஆனால், வாரிசு அரசியல் (Nepotism) என்ற முத்திரை என் உழைப்பை மறைத்தது. இதனால் என் மீதே எனக்குச் சந்தேகம் வந்தது," என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னைச் சுற்றி இருந்த அன்பைக் கவனிக்கத் தவறிவிட்டு, சமூக வலைதளங்களில் வந்த வெறுப்புப் பேச்சுகளில் (Hate comments) தனது கவனத்தைச் சிதறவிட்டதாக அவர் ஒப்புக்கொண்டார்.

44
Janhvi Kapoor response to nepotism trolls

விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வது என்பதைக் காலப்போக்கில் கற்றுக்கொண்ட ஜான்வி, இப்போது ஒரு முதிர்ந்த நடிகையாக வலம் வருகிறார். வாரிசு அரசியல் சர்ச்சைகளுக்குத் தனது கடின உழைப்பின் மூலம் பதிலடி கொடுத்து வரும் ஜான்வி, ஒவ்வொரு திரைப்படத்திலும் தன்னைச் செதுக்கிக் கொள்வதில் தீவிரமாக இருக்கிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories