சோலி முடிஞ்சு! ரூ.120 கோடி டீல் கேன்சல்; ஜன நாயகன் படத்தை கைவிட்ட அமேசான் பிரைம்? அதிர்ச்சியில் படக்குழு!

Published : Mar 13, 2026, 07:52 PM IST

Jana Nayagan OTT Rights Cancelled : அரசியல் நையாண்டி மற்றும் அதிரடி ஆக்ஷன் கலந்த திரைப்படமாக எதிர்பார்க்கப்பட்ட ஜன நாயகன் (Jana Nayagan) படத்தின் டிஜிட்டல் உரிமம் குறித்து வெளியாகியுள்ள செய்தி சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
16
1. அமேசான் பிரைம் எடுத்த அதிரடி முடிவு?

பெரிய பட்ஜெட்டில் உருவான 'ஜன நாயகன்' படத்தின் ஓடிடி (OTT) உரிமையை அமேசான் பிரைம் வீடியோ (Amazon Prime Video) நிறுவனம் கைப்பற்றியிருந்ததாக முன்னதாகத் தகவல் வெளியானது. ஆனால், தற்போது நிலவி வரும் சில தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது படத்தின் நீளம் காரணமாக, அமேசான் நிறுவனம் அந்த ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கியுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

26
2. காரணம் என்ன?

பொதுவாக ஒரு படத்தின் தரம் அல்லது அதன் உள்ளடக்கம் (Content) ஓடிடி தளத்தின் விதிமுறைகளுக்கு உட்படவில்லை என்றால், அக்ரிமெண்ட் செய்யப்பட்ட பிறகும் படத்தைக் கைவிடுவது வழக்கம். 'ஜன நாயகன்' படத்தின் சில அரசியல் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதா? அல்லது பிசினஸ் ரீதியான சிக்கலா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜெயிலில் கம்பி எண்ணும் சந்திரகலா! துரோகம் செய்தாலும் பாசத்திற்காக அழும் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் உருக்கமான திருப்பம்!

36
3. மற்ற ஓடிடி தளங்களின் நிலை என்ன?

அமேசான் கையை விரித்த நிலையில், தற்போது படக்குழுவினர் நெட்பிளிக்ஸ் (Netflix) அல்லது ஜி5 (Zee5) போன்ற பிற தளங்களை அணுகி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், "சோலி முடிஞ்சு" என நெட்டிசன்கள் கலாய்க்கும் அளவுக்கு படத்தின் ஓடிடி ரிலீஸ் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

46
4 விஜய் முதலமைச்சராக வந்தால்..

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக தலைவர் விஜய் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றால் மட்டுமே ஜன நாயகன் படத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரையில் ஜன நாயகன் படம் மீதான சர்ச்சை தொடர்ந்து எழுந்து கொண்டே இருக்கும். இது அந்தப் படத்தை நம்பி இருக்கும் மற்ற நடிகர், நடிகைகளுக்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். எனினும் இனி வரும் நாட்களில் ஜன நாயகன் படம் தடைகளை கடந்து வெளிவருகிறதா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

என் உயிருக்கு உயிரான ராஹா! - மகன் பற்றி முதல்முறை மனம் திறந்த ஜாய் கிரிசில்டா! நெகிழ வைக்கும் உருக்கமான பதிவு!

56
Jana Nayagan OTT Rights Cancelled :

அரசியல் பிரச்சாரத்திற்காக கரூர் சென்ற விஜய் அங்கு அரசியல் குறித்து பேசிக் கொண்டிருக்கும் பொழுது கூட்ட நெரிசல் காரணமாக கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக விஜய் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பொதுவெளியில் வந்து மீண்டும் அரசியல் கள பிரச்சாரத்தை மேற்கொண்டார். எனினும், அவர் மீது தொடர்ந்து சர்ச்சை எழுந்தது.

ஃபர்ஸ்ட் போஸ்டர்லயே 3 பொண்ணுங்க! கென் கருணாஸை கலாய்த்த தனுஷ்! சிரிப்பலையில் ரசிகர்கள்!

66
5 சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு

திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருப்பதாக கூறி சென்னை செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சங்கீதா விவாகரத்து வழக்கு தொடர்ந்தார். மேலும், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்றும், விவாகரத்து வழக்கு முடியும் வரையில் நீலாங்கரை வீட்டில் தங்க அனுமதிக்கும்படி ஒரு மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில் விஜய் தரப்பிலிருந்து ரூ.250 கோடி ஜீவனாம்சம் கொடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரவில்லை. தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக விஜய் இருக்கும் போது அவரது வாழ்க்கையில் இப்படியொரு சம்பவங்கள் நடப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக பெண் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories