ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இப்படத்தை சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் தயாரித்திருந்தார். சுமார் 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தில் ரஜினியுடன் ஷிவ ராஜ்குமார், மோகன்லால், தமன்னா, விநாயகன், ரம்யாகிருஷ்ணன், மிர்ணா, விடிவி கணேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ராக்ஸ்டார் அனிருத் தான் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்.
ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து மாஸ் காட்டி உள்ளது. ஜெயிலர் படத்திற்கு உலகளவில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழுவும் செம்ம ஹாப்பியாக உள்ளது. திரையிட்ட இடங்களில் எல்லாம் ஜெயிலர் லாபம் ஈட்ட தொடங்கி இருப்பதால் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இதையும் படியுங்கள்... திரையில் பிரம்மாண்டம்... நிஜத்தில் எளிமை! ‘ஜென்டில்மேன்’ இயக்குனர் ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
பொதுவாகவே ஒரு படம் வெளியாகி சுமாரான வெற்றியை பெற்றாலே அப்படத்தின் இயக்குனருக்கு தயாரிப்பாளர் பரிசளிப்பது சமீபகால டிரெண்டாக உள்ளது. அதன்படி விக்ரம் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் என்கிற சொகுசு காரை பரிசாக வழங்கினார் கமல். அதுமட்டுமின்றி அப்படத்தில் கேமியோ ரோலில் நடித்த சூர்யாவுக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள ரோலெக்ஸ் வாட்ச்சையும் பரிசளித்தார்.