Jailer 2 vs Mookuthi Amman 2 Box Office : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தைவிட நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் அதிகம் வசூலித்துள்ளது.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணையாக கொண்டாடப்படும் ஹீரோயின் என்றால் அது நயன்தாரா தான். அதன் காரணமாகவே அவரை லேடி சூப்பர்ஸ்டார் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். நடிகை நயன்தாரா, ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி, குசேலன், அண்ணாத்த, தர்பார் போன்ற படங்களில் இணைந்து நடித்திருக்கிறார்கள். இதுதவிர சிவாஜி படத்தில் ஒரு பாடலுக்கு ரஜினியுடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடி இருந்தார் நயன்தாரா. இவர்கள் இருவரும் அடுத்ததாக மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.
தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளார் நயன்தாரா. இப்படத்த அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இவர் ஓ மை கடவுளே, டிராகன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் ஆவார். இப்படத்தில் ரஜினிகாந்த் ஒரு மருத்துவராக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர உள்ளனர்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன ஜெயிலர் 2 திரைப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 28 நாட்கள் ஆகிறது. தற்போது வரை உலகளவில் ரூ.830.30 கோடி வசூலித்துள்ள இப்படம், தமிழ் சினிமாவில் அதிக வசூல் அள்ளிய திரைப்படம் என்கிற சாதனையையும் படைத்துள்ளது. இப்படம் நேற்று மட்டும் ரூ.52 லட்சம் வசூல் செய்துள்ளது. இதில் தமிழ் வெர்ஷன் மட்டும் ரூ.30 லட்சம் வசூலித்துள்ளது. தியேட்டரில் சக்சஸ்ஃபுல் ஆக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது.
ஜெயிலர் 2-வை விட அதிக வசூல் அள்ளிய மூக்குத்தி அம்மன் 2
தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் மற்றொரு திரைப்படம் மூக்குத்தி அம்மன் 2. சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்த இப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இப்படம் நேற்றைய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஜெயிலர் 2-வை விட அதிகம் வசூலித்துள்ளது. ஜெயிலர் 2 படம் நேற்று 52 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்த நிலையில், மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் ரூ.1 கோடி வசூல் அள்ளி இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆகி 6 நாட்கள் ஆகும் நிலையில், தற்போது வரை இந்தியாவில் 19.87 கோடி வசூலித்துள்ளது. இப்படத்துக்கு போட்டியாக ரிலீஸ் ஆன சூர்யாவின் சீன் திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.