Anirudh Kavya Greece Wedding : அனிருத் - காவ்யா மாறன் ஜோடி திருமணத்திற்காக கிரீஸ் நாட்டை தேர்ந்தெடுத்ததன் சுவாரஸ்ய பின்னணி..!

Published : Nov 12, 2026, 06:53 AM IST

Anirudh - Kavya Maran Wedding : அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறனின் திருமணம் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றது. கோடிக்கணக்கில் செலவு செய்து இவர்கள் கிரீஸை தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பதை பார்க்கலாம்.

PREV
16
Anirudh Kavya Greece Wedding

தென்னிந்திய சினிமாவின் ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம், ஐரோப்பிய நாடான கிரீஸில் மிக பிரம்மாண்டமாக, ராஜஸ்தானி பாணியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சொகுசு திருமண விழாவில், ஹல்தி மற்றும் சங்கீத் நிகழ்ச்சிகளும் முடிவடைந்துள்ளன. இன்று, உலகின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சான்டோரினி தீவுக்கு அருகே, முழுமையான பாரம்பரிய முறைப்படி முக்கிய திருமண சடங்குகள் பிரம்மாண்டமாக நடைபெறுகின்றன.

Anirudh Marriage : அனிருத் - காவ்யா மாறன் கல்யாணம்...! கிரீஸ் நாட்டில் களைகட்டிய திருமண கொண்டாட்டம்

26
நான்கு சிறப்பு சார்ட்டர்ட் விமானங்கள்

சன் நெட்வொர்க் உரிமையாளரும் கோடீஸ்வரருமான கலாநிதி மாறன் குடும்பத்தினர், இந்த ஹை-புரொஃபைல் திருமணத்திற்காக ராஜ குடும்பங்கள் ரேஞ்சுக்கு தடபுடலான ஏற்பாடுகளை செய்துள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல், சினிமா மற்றும் தொழில்துறை விஐபிக்கள் இதில் நேரில் கலந்து கொண்டுள்ளனர். விஐபி விருந்தினர்களுக்கு எவ்வித சிரமமும் இன்றி கிரீஸ் செல்ல வசதியாக, நான்கு சிறப்பு சார்ட்டர்ட் விமானங்களை மாறன் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

36
காரணம் என்ன?

'இந்தியாவிலேயே டெஸ்டினேஷன் திருமணங்களை நடத்துங்கள்' என பிரதமர் நரேந்திர மோடி வெளிப்படையாக கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வெளிநாட்டில் திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்தியாவிலேயே அற்புதமான சுற்றுலாத் தலங்கள் இருக்கும்போது வெளிநாட்டிற்கு பறக்க வேண்டுமா என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்க தொடங்கிவிட்டனர். ஆனால், சினிமா பிரபலங்கள் தங்கள் கனவு திருமணத்திற்காக கிரீஸை தேர்வு செய்ய சில சுவாரஸ்யமான காரணங்கள் உள்ளன.

46
கிரீஸ் நாட்டின் இதமான வானிலை

கிரீஸ் நாட்டில் ஆண்டுக்கு சுமார் 300 நாட்கள் இதமான வெயில் இருக்கும். மத்திய தரைக்கடலில் இருந்து வீசும் குளிர்ந்த காற்று, வெளிப்புற திருமண நிகழ்ச்சிகளுக்கு மிகச்சிறந்த இயற்கையான சூழலை உருவாக்குகிறது.

56
அற்புதமான பின்னணி மற்றும் இயற்கை அழகு

அடர் நீல கடல், மலையுச்சியில் உள்ள பழமையான வெள்ளை நிற கட்டிடங்கள் திருமண புகைப்படங்களுக்கு சிறப்பான பின்னணியை தருகின்றன. குறிப்பாக, இங்குள்ள இயற்கை எழில் கொஞ்சும் சூரிய அஸ்தமன காட்சிகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நினைவுகளாக மாறும்.

66
கலாச்சாரம், விருந்தோம்பல் மற்றும் உணவு

முன் பின் தெரியாத விருந்தினர்களைக் கூட தெய்வமாக பாவித்து, அன்போடு உபசரிக்கும் பழக்கம் கிரேக்க கலாச்சாரத்தில் உண்டு. அதோடு, உள்ளூர் கடல் உணவுகள், உலகத்தரம் வாய்ந்த சைவ உணவுகள் மற்றும் புகழ்பெற்ற பாரம்பரிய கிரேக்க ஒயின்கள் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத ராஜ விருந்தை படைக்கும்.

இந்த அபூர்வமான இயற்கை அழகு, ரம்மியமான தீவுகள் மற்றும் தனிப்பட்ட பிரைவசி காரணமாகவே, உலக பணக்காரர்கள் தங்கள் திருமணத்திற்கு கிரீஸை முதல் சாய்ஸாக தேர்வு செய்கிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories