இந்திய சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு, ரூ.30 கோடி மதிப்புள்ள ஹெலிகாப்டர் பரிசளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Jacqueline Fernandez Receives 30 Crore Worth Helicopter as Gift
பணமோசடி வழக்கில் தற்போது டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர் சுகேஷ் சந்திரசேகர். இவர், ரூ.200 கோடி பணமோசடி குற்றச்சாட்டில் சிக்கியவர். இவர் காதலர் தினத்தன்று எழுதிய கடிதம் ஒன்றில், பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு இந்த விலையுயர்ந்த பரிசை அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சுகேஷ் தனது கடிதத்தில் ஜாக்குலினை 'பேபி டால்' என அன்புடன் குறிப்பிட்டுள்ளார். நடிகைக்கு ஏற்பட்ட சங்கடங்களுக்கு மன்னிப்பு கோரியுள்ளார். இந்த ஹெலிகாப்டர் ஜாக்குலினின் விருப்பத்திற்கேற்ப சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகவும், அதில் அனைத்து ஆடம்பர வசதிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
24
சிறையிலிருந்து காதல் கடிதம் எழுதிய சுகேஷ்
"என் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் உன்னையே நினைக்கிறது. காதலர் தினத்தில் உன்னுடன் இருக்க முடியாமல் போனது வேதனை" என்று உணர்ச்சிப்பூர்வமாக எழுதியுள்ளார். சுகேஷ், கைது செய்யப்பட்டபோது, அவருடன் ஜாக்குலின் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. அதைத்தொடர்ந்து சுகேஷ், ஜாக்குலின் தன் காதலி என்று பகிரங்கமாக அறிவித்தார். இருப்பினும், நடிகை ஜாக்குலின் இதுவரை இக்குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. இந்த சர்ச்சை வளர்ந்து வரும் நிலையில், ஜாக்குலின் இவ்விவகாரத்திலிருந்து விலகி இருக்க முயற்சிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
34
யார் இந்த ஜாக்குலின்?
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு வந்து நடிகையாக பயணித்து வருகிறார். இவர் பெரும்பாலும் பாலிவுட் திரையுலகில் தான் அதிக படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் நடித்து பேமஸ் ஆனதைக் காட்டிலும் சர்ச்சை மூலம் பிரபலம் ஆனது தான் அதிகம். அதிலும் சுகேஷ் உடனான காதல் சர்ச்சையில் சிக்கியதன் பின்னர் தான் நாடு முழுவதும் பேமஸ் ஆனார் ஜாக்குலின் பெர்னாண்டஸ். சுகேஷ் தற்போது சிறையில் இருந்தபோதிலும் அவர் ஜாக்குலின் மீது வைத்துள்ள காதல், இந்த கடிதம் மூலம் மீண்டும் கவனம் பெற்று உள்ளது.
சுகேஷ், ஜாக்குலினுக்கு விலையுயர்ந்த ஹெலிகாப்டரை பரிசாக வழங்கி இருப்பதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள், விலையுயர்ந்த காதலர் தின பரிசு தான் இதுதான் என ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு சில முரட்டு சிங்கிள்களோ, இங்க பொம்ம ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுக்கவே காசு இல்ல, இவன் எப்படி ஜெயில்ல இருந்துகிட்டே 30 கோடிக்கு சொகுசு ஹெலிகாப்டர் வாங்கிக் கொடுக்குறான் என ஆச்சர்யத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த பரிசு குறித்து நடிகை ஜாக்குலின் இதுவரை எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.