ட்விட்டரில் இணைந்தாரா விஜய் மகள்?.... நன்றி சொல்லி சாந்தனு போட்ட ட்வீட்டால் வெளியான குட்டு...!

First Published | Aug 24, 2020, 3:29 PM IST

விஜய் மகள் திவ்யா சாஷா ட்விட்டரில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மை என்னவென்று தெரிந்து கொள்ளலாம் வாங்க...

நடிகர் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு பாக்யராஜ் அவருடன் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் ஆரம்பித்ததில் இருந்து முடிந்தது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து வந்தார்.
தற்போது கூட மாஸ்டர் படம் குறித்து ஏதாவது அப்டேட் வேண்டும் என்றால் சாந்தனுவிடம் தான் தளபதி ரசிகர்கள் முதலில் போய் நிற்கிறார்கள்.
Tap to resize

நடிகர் சாந்தனு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருடைய ரசிகர்கள் காமென் டிபி வெளியிட்டு கலக்கலாக கொண்டாடி வருகின்றனர்.
தங்களது மனம் கவர்ந்த சாந்தனுவின் பிறந்தநாளை விஜய் ரசிகர்களும் சேர்ந்து சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர். அப்படி பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு சாந்தனு நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் சாந்தனுவிற்கு தளபதி விஜய்யின் மகளான திவ்யா சாஷா வாழ்த்து கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் மகளின் பெயரான திவ்யா சாஷா என்ற பெயரில் உள்ள ட்விட்டர் கணக்கில் இருந்து Many more happy returns of the day uncle என சாந்தனுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறப்பட்டிருந்தது.
அதற்கு சாந்தனு நன்றி தெரிவித்திருந்தார். இதனால் விஜய் மகளின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இதுதான் என நினைத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த ட்விட்டர் கணக்கில் விஜய் மரக்கன்று நட்ட புகைப்படத்தை பதிவிட்டு “டாடி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விஜய் குறித்த ட்வீட்டுகளே அதிகம் காணப்படுகின்றன. ஆனால் அந்த ட்விட்டர் கணக்கு போலியானது என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலான ரசிகர்களும் அந்த கணக்கு போலி என்பதை காமெண்ட் மூலம் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கும் இதே போல் போலி ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!