நடிகர் கார்த்தி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான கைதி திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாகவும் தட்டித்தூக்கியது.
அப்போது வெளியான பிகில் படத்திற்கே கைதி திரைப்படம் செம்ம டப் கொடுத்தது. இதையடுத்து தனது படத்தின் இயக்குநராக லோகேஷ் கனராஜ் பெயரை விஜய் டிக் அடித்தார்.
லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பிரச்சனை காரணமாக படத்தில் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு மாஸ்டர் வெளியாக வாய்ப்பு உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பார்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது.
இந்த படத்தின் இயக்குநரான லோகேஷ் கனகராஜும், இயக்குநர் ரத்னகுமாரும் கைதி உடையில் சக நடிகர்களுடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோ வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மாஸ்டர் படத்தில் கெஸ்ட் ரோலில் லோகேஷ் கனராஜ் நடித்திருக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் படத்தில் பல சர்ப்பிரைஸ் காத்திருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.