விக்ரம் படத்தில் சூர்யா வசனம் இது தானாம்? இணையத்தில் கசிந்த ரெக்கார்டிங் வாய்ஸ்!

Kanmani P   | Asianet News
Published : May 15, 2022, 03:22 PM IST

கமல் தற்போது நடித்து முடித்துள்ள விக்ரம் படத்தில் சூர்யாவின் டயலாக் குறித்த வாய்ஸ் ரெக்கார்டு ஒன்று சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

PREV
15
விக்ரம் படத்தில் சூர்யா வசனம் இது தானாம்? இணையத்தில் கசிந்த ரெக்கார்டிங் வாய்ஸ்!
vikram movie

இசையில் உள்ள படம் விக்ரம். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக கன்னடத்தில் இளம் நடிகையாக வலம் வரும் ஷான்வி ஸ்ரீவஸ்தவா நடித்துள்ளார். மேலும், நரேன், காளிதாஸ் ஜெயராம் பிக்பாஸ் சிவானி, தொகுப்பாளினி மகேஸ்வரி மற்றும் மைனா நந்தினி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. 

25
vikram movie

கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாகவுள்ளது.  இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் பிரமாண்டமாக விளம்பரம் செய்து வருகிறது. அந்த வகையில் விக்ரம் ஆடியோ மற்றும் ட்ரைலர் லஞ்ச்   சென்னையில் பிரமாண்டமாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

35
vikram movie

இன்று மாலை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் விழாவில்ரஜினி, விஜய், சூர்யா உள்ளிட்ட பிரபல நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  மேலும் 'விக்ரம்' படத்தில் ஒரு கேமியோவில் சூர்யா தோன்றியுள்ளதாக கூறப்படுவதால் இவர் கட்டாயம் வருவார் என தெரிகிறது.

45
vikram movie

இதற்கிடையே சமீபத்தில் வெளியான விக்ரம் முதல் சிங்கிளில் இடம்பெற்றுள்ள வரிகள் மத்திய அரசை விமர்சிக்கும் விதத்திலும், சாதி ரீதியான விமர்சனம் அதிகம் இருப்பதாக கூறி பலரும் புகார் தெரிவித்து வருகின்றனர். ஒரு பாடலுக்கு இவ்வளவு விமர்சனம் என்றால் படம் வெளியானால் என்ன என்ன சர்ச்சை கிளம்புமோ என்கிற சந்தேகம் வலுத்துள்ளது.

55
kamal vikram

இந்நிலையில் நேற்றிலிருந்து விக்ரம் படத்தில் சூர்யா பேசிய வசனங்கள் ஷூட்டிங் ஸ்பாட் ஆடியோ என குறிப்பிட்டு ஒரு வாய்ஸ் ரெக்கார்ட் பதிவு இணையத்தில் கசிந்துள்ளது. இந்த பதிவு தற்போது செம வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories