80 களில் எப்படி பட்ட கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் பொருத்தி நடிக்கும் திறமையான நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. திருமணத்திற்கு பிறகு தங்களது குழந்தைகளுக்காக திரையுலகை விட்டே முழுமையாக விலகினார்.
இவரை தொடர்ந்து இவரது மகள் கார்த்திகா, டீன் ஏஜ் வயதை கடந்ததும், திரையுலகில் அறிமுகமானார்.
இவர் தமிழில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமாக முதல் படமான 'கோ' சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில், கதைகளை கவனமாக தேர்வு செய்து நடித்தாலும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்கவே முடியவில்லை.
பின்னர் தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளில் நடித்து ஆரம்பத்தில் கவனத்தை பெற்றாலும், பின்னர் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் போனது.
கடைசியாக கடந்த 2016 ஆம் ஆண்டு வா டீல் என்கிற படத்தில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து ஹிந்தி தொடர் ஒன்றிலும் நடித்தார். ஆனால் தற்போது பட வாய்ப்பும், எந்த தொடரிலும் நடிக்க வாய்ப்பும் கிடைக்கவில்லை.
எனவே... சீ... சீ... இந்த பழம் புளிக்கும் என்கிற கதையாய், திரையுலகை விட்டே முழுமையாக ஒதுங்க முடிவெடுத்து, தன்னுடைய தந்தையின் ஹோட்டல் பிசினஸை கவனித்து கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டதாக கூறப்படுகிறது.
இவரது தங்கை துளசியும், இரண்டு படங்களில் மட்டுமே நடித்த நிலையில் திரையுலகிற்கு குட் பை சொல்லிவிட்டு சென்றுவிட்டார். மீண்டும் ஏதாவது படத்தில் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.