சமந்தா 200 கோடி ஜீவனாம்சமாக பெருகிறாரா? வெளியான உண்மை...

First Published | Oct 3, 2021, 11:17 AM IST

சமந்தா(Samantha Ruth Prabhu) -  நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து பெற உள்ளதாக நேற்று அதிகார பூர்வமாக அறிவித்து விட்டனர். எனினும் இவர்களது பிரச்னையை சரி செய்ய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சி செய்தும் அது தோல்வியில் தான் முடிந்துள்ளது. இருவருமே கடைசி வரை விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததால் வேறு வழியின்றி குடும்பத்தினரும் இதற்க்கு ஒப்புக்கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் இருந்து, தன்னுடைய குடும்ப பெயரை நீக்கியத்தில் இருந்தே... சமந்தா, நாக சைதன்யாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் பரவ துவங்கியது. ஆனால் இதனை வதந்தி என கூட மறுக்காமல்  கணவன் - மனைவி இருவருமே அமைதி காத்து வந்ததால், பேசும் பொருளாக மாறியது.

மேலும் சமந்தா ஹிந்தியில் நடித்த 'தி பேமிலி மேன் 2 ' வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே, சில பாலிவுட் வாய்ப்புகளும் இவர் வீட்டு கதவை தட்டியதால், மும்பை செல்ல இவர் திட்டமிட்டுள்ளதாகவும், நாக சைதன்யா அவருடைய தந்தையுடன் வசித்து வருவதாகவும் தகவல் வெளியானது. ஆனால் இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக சமீபத்தில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசிய சமந்தா, "நான் ஹைதராபாத்தில் தான் இருப்பேன், இங்கு தான் இருப்பேன் என பதில் கொடுத்தார்". இதன் மூலம் இந்த வதந்தி முடிவுக்கு வந்தது.

Tap to resize

அதே போல் சமந்தா, கடந்த மாதம் அவருடைய மாமனார் நாகார்ஜுனாவின் (Nagarjuna ) பிறந்தநாள் பார்ட்டியில் மிஸ் ஆனது, மற்றும் அமீர் கானுக்கு நாகார்ஜூனா வைத்த பார்ட்டியில் கலந்து கொள்ளாததும், இவர்கள் திருமண உறவில் விரிசல் ஏற்பட்டதாக வெளியான சந்தேகத்தை அதிகப்படுத்தும் விதமாகவே அமைந்தது.

சமந்தா - சைதன்யா இடையே ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்காக அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்ததாகவே கூறப்பட்டது. சில கவுன்சிலிங் கலந்து கொண்டும் இருவரும் புரிவதில் உறுதியாக இருந்துள்ளனர்.

நாளுக்கு நாள், சமந்தா - நாக சைதன்யா விவாகரத்து குறித்த தகவல் காட்டு தீ போல் பரவியதால், இதற்க்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக நேற்று (அக்டோபர் 2 ) ஆம் தேதி, இருவரும் ஒரே நேரத்தில் தங்களுடைய விவாகரத்து குறித்து இருவரும் அறிவித்தனர். இது இரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலில்.. சமந்தாவிற்கு சுமார் 200 கோடி ஜீவனாம்சமாக தர நாகசைதன்யா குடும்பத்தினர் தயாராக இருந்தும், சமத்தா அதனை வாங்க மறுத்துவிட்டதாகவும், தன்னை பார்த்துக்கொள்ள தனக்கு தெரியும் என்பதில் போல் கூறியதாகவும் தெலுங்கு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Latest Videos

click me!