சமந்தா - நயசைத்தன்யா பிரிவு குறித்து... கனத்த இதயத்துடன் நாகர்ஜுனா வெளியிட்ட உருக்கமான தகவல்..!

Published : Oct 02, 2021, 07:26 PM IST

சமந்தா (samantha)  - நாக சைதன்யா (Naga chaitanya) விவாகரத்து பெற உள்ளதாக கூறப்பட்ட தகவல் வந்தந்தியாக தான் இருக்க வேண்டும் என, ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில், இதனை நிஜமாக்குவது போல், இன்றைய தினம் இருவருமே தங்களுடைய பிரிவு குறித்து உறுதி படுத்தினர். தற்போது நாகர்ஜுனா தன்னுடைய உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார்.  

PREV
16
சமந்தா - நயசைத்தன்யா பிரிவு குறித்து... கனத்த இதயத்துடன் நாகர்ஜுனா வெளியிட்ட உருக்கமான தகவல்..!

கடந்த 2010 ஆம் ஆண்டு Ye Maaya Chesave என்கிற படத்தில் இணைந்து நடித்ததன் மூலம், நண்பர்களாக பழக துவங்கிய இவர்கள் பின்னர் காதலர்களாகவும் மாறினர். இவர்களது காதல் விவகாரம் வெளியே வர துவங்கிய பின்னர், இரு வீட்டு சம்மதத்துடன்... கோவாவில் மிக பிரமாண்டமாக, கோடி கணக்கில் செலவு செய்யப்பட்டு இவர்களுடைய திருமணம் 2017 ஆம் ஆண்டு மிக பிரமாண்டமாக நடந்தது.

 

26

திருமணத்திற்கு பின், திரைப்படங்களில் சமந்தா நடித்து வந்தாலும் ஒரு பொறுப்பான மருமகளாகவும், அனைவரும் பொறாமை கொள்ளுபடி நடந்து கொண்டார். தன்னுடைய குடும்பத்தில் என்ன, விசேஷம் நடந்தாலும், படப்பிடிப்பு பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு கலந்து கொள்வது சமந்தா சமத்து பொண்ணு.

 

36

 ஆனால், சமீபத்தில் தன்னுடைய மாமனார் வீட்டில் நடந்த பிறந்தநாள் பார்ட்டி, அமீர் கானுக்கு விருந்து கொடுக்கும் பார்ட்டி என எதிலும் சமந்தா கலந்து கொள்ளாமல் இருந்தது கணவன் - மனைவி இருவருக்கும் இடையேயான பிரச்னையை உறுதி செய்யும் விதமாகவே அமைந்தது.

46

இந்நிலையில் இன்றைய தினம், தங்களுடைய விவாகரத்து குறித்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சமந்தா - நாக சைதன்யா இருவருமே, தங்களுடைய பிரிவை உறுதி செய்தனர். இவர்களுடைய பிரிவை தொடர்ந்து, சமந்தாவின் மாமனாரும், நாகசைதன்யாவின் தந்தையுமான நாகர்ஜுனா கனத்த இதயத்துடன் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

 

56

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "கனத்த இதயத்துடன் இதை நான் பகிர்ந்து கொள்கிறேன். சமந்தாவுக்கும் நாக சைதன்யாவுக்கும் இடையில் நடந்தது மிகவும் துரதிஷ்டமானது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தனிப்பட்டவை. அதில் எங்களால் தலையிட முடியாது.

 

66

இருப்பினும் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவருமே எனக்கு மிகவும் பிரியமானவர்கள். எங்கள் குடும்பம் எப்போதும் சமந்தாவுக்கு ஆதரிக்கும். அவர் எப்போதும் எங்களுடைய பிரியமானவராக இருப்பார், அவர் எங்களுடன் இருந்த ஒவ்வொரு நாளும் மறக்க முடியாதது.  கடவுள் இருவருக்கும் மனவலிமையை கொடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்" என்று நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.

click me!

Recommended Stories