
ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள 'கூலி படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. கோடி வசூல் குவிக்குமா என்பதுதான் தற்போது கோலிவுட்டில் உள்ள மிகப்பெரிய எதிர்பார்ப்பு. இது குறித்துப் பலவிதமான கருத்துக்கள் மற்றும் கணிப்புகள் நிலவி வருகின்றன.
கூலி படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜூனா, உபேந்திரா, ஆமீர் கான் (சிறப்பு தோற்றம்), ஷோபின் ஷாஹீர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர ரச்சிதா ராம், ரெபா மோனிகா ஜான், ஜூனியர் எம்ஜிஆர், கண்ணா ரவி, காளி வெங்கட், மோனிஷா பிளெசி ஆகியோர் பலரும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதில், ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜ் இருவரும் நண்பர்கள். சத்யராஜின் மகள் தான் ஸ்ருதி ஹாசன் (பிரீத்தி ராஜசேகர்). கூலி படத்தின் டீசரை வைத்து பார்க்கும் போது சத்யராஜிற்கு ஏதோ அசம்பாவிதம் நடக்கிறது. இதன் காரணமாக அவரை காப்பாற்றவோ அல்லது அவரது மகளுக்காகவோ ரஜினிகாந்த் வருகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தை பார்க்க ஏராளமான காரணங்கள் சொல்லப்பட்டாலும், இந்தப் படம் ரூ.1000 கோடி வசூல் குவிக்குமா என்பது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மாநகரம் படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என்று மாஸ் படங்களை இயக்கியுள்ளார். தற்போது டபுள் மாஸாக இருக்கும் வகையில் கூலி படத்தை இயக்கியுள்ளார். ரஜினியின் படம் என்பதால், இந்தப் படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கனவே வெளிநாடுகளில் கூலி படத்தின் முன்பதிவு ரூ.5 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்துள்ளது என்று தகவல் வெளியாகியிருந்தது. 'கூலி' படத்திற்கு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது. பொதுவாக 'A' சான்றிதழ் பெற்ற படங்கள் குடும்ப ரசிகர்களைக் கவர்வது கடினம். இதனால், வசூலில் சில பின்னடைவுகள் ஏற்படலாம்.
எனினும், லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களான 'விக்ரம்' மற்றும் 'லியோ' ஆகியவையும் அதிரடி ஆக்ஷன் படங்கள். எனவே, இந்த 'A' சான்றிதழ் படத்தின் வசூலை பெரிய அளவில் பாதிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
'வார் 2' உடன் போட்டி: இதே தேதியில் பாலிவுட்டில் ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடிக்கும் 'வார் 2' படமும் வெளியாகிறது. இதனால், வட இந்தியாவில் 'கூலி' படத்திற்கு கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லோகேஷின் கருத்து என்ன?
'கூலி' திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யுமா என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ், "ரூ.1000 கோடி வசூல் குறித்து நான் உறுதியளிக்க முடியாது, ஆனால் டிக்கெட்டுக்கு நீங்கள் செலவழிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நிச்சயம் மதிப்பு இருக்கும் என உறுதியளிக்க முடியும்" என்று கூறியிருக்கிறார்.
மொத்தத்தில், 'கூலி' படத்தின் பிரம்மாண்டமான நடிகர்கள், இயக்குனரின் பெயர், மற்றும் உலகளாவிய எதிர்பார்ப்பு ஆகியவை ரூ.1000 கோடி வசூல் செய்யும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. இருப்பினும், படத்தின் விமர்சனங்களும், 'வார் 2' உடனான போட்டியும் இதன் வெற்றியை நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.