Rolls Royce car, nelson
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் உலகமெங்கும் வசூல் மழை பொழிந்து வருகிறது. நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் திரையரங்குகளில் 2 வாரங்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி வருவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.500 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து உள்ளது. ஜெயிலர் பட வெற்றியால் நடிகர் ரஜினிகாந்த் செம்ம குஷியில் உள்ளார். அதோடு தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் செம்ம ஹாப்பியாக உள்ளாராம்.
Nelson, Rajinikanth
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஒரு புது டிரெண்ட் உருவாகி உள்ளது. அதன்படி ஒரு படம் வெற்றி பெற்றால் அப்படத்தின் இயக்குனருக்கோ, நடிகருக்கோ தயாரிப்பாளர்கள் கார் பரிசளித்து வருகின்றனர். அந்த வகையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் நெல்சனுக்கும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசளிக்க உள்ளதாக அண்மையில் செய்திகள் உலா வந்தன. இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் நெல்சனே அதுகுறித்து பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நியூயார்க் நகரில்... ஹாலிவுட் நடிகை போல் ஹாய்யாக கவர்ச்சி உடையில் காற்று வாங்கும் சமந்தா! வைரலாகும் போட்டோஸ்!
Jailer Director Nelson
ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சனை அப்படத்தில் காமெடியனாக நடித்த ரெடின் கிங்ஸ்லி பேட்டி ஒன்று எடுத்தார். அந்த பேட்டியில் ரெடின் கேட்ட பல கலாட்டாவான கேள்விகளுக்கு நெல்சனும் அசராமல் பதிலளித்தார். அதில் ஒரு கேள்வி தான் இந்த கார் பரிசு விவகாரம். வீட்டு வாசலில் ரோல்ஸ் ராய்ஸ் கார் நிக்குதாமே என ரெடின் கேட்டவுடன் ஷாக் ஆன நெல்சன், அதை நானும் கேள்விப்பட்டேன், நடந்தா சந்தோஷம் என தன் ஆசையை சைடு கேப்பில் கூறிவிட்டார்.