Katrina Kaif pregnant: கத்ரீனா கைஃப் கர்ப்பமா? உண்மையை ஓப்பனாக சொன்ன கணவர் விக்கி கௌஷல் குழு ...

Anija Kannan   | Asianet News
Published : May 13, 2022, 10:01 AM IST

Katrina kaif pregnancy rumour: நடிகை கத்ரினா கைஃப் கர்ப்பமாக இருக்கிறாரா? இல்லையா ? என்ற கேள்வி சமீப காலமாகவே பாலிவுட் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதற்கு கத்ரினா கைஃப் தரப்பில் இருந்து உண்மை தன்மை வெளியிடப்பட்டுள்ளது.

PREV
15
Katrina Kaif pregnant: கத்ரீனா கைஃப் கர்ப்பமா? உண்மையை ஓப்பனாக சொன்ன கணவர் விக்கி கௌஷல் குழு  ...
Katrina Kaif

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப், தனது காதலனான நடிகர் விக்கி கௌஷல் என்பவரை கடந்த டிசம்பர் 2021ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார். ராஜஸ்தானில் பிரமாண்டமாக நடைபெற்ற இவர்களது பாலிவுட் பிரபலங்கள் 120க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

25
Katrina Kaif

திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிஸியாக நடித்து வரும் கத்ரினா தற்போது கை வசம் மெர்ரி கிறிஸ்துமஸ், டைகர் 3, போன் பூட் ஆகிய படங்களை வைத்துள்ளார். அதேபோன்று, அவரது கணவர் விக்கி கெளசல், கோவிந்தா நாம் மேரா, ரெளலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 

35
Katrina Kaif

இந்நிலையில், திருமணம் ஆகி 6 மாத காலம் ஆனதால், சமீப காலமாவே கத்ரினா கைஃப் லூசான சுடிதாரில், ரொம்ப சிம்பிளாக வலம் வருகிறாராம். அதுமட்டுமின்றி, கத்ரினா இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதால் தான் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு வருவதாகவும், பாலிவுட் திரையுலகில் பக்கம் செய்திகள் காட்டு தீ போல் பரவியது. இருப்பினும், இது குறித்து கத்ரினா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் தராமல் இருந்து வந்தன. 

45
Katrina Kaif

இதை உறுதி செய்யும் விதமான கத்ரினாவும், விக்கியும் சுற்றுலாவிற்காக அமெரிக்கா சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கத்ரினாவின் கர்ப்பமாக இருப்பது போல் இருந்தது. மேலும், கத்ரினா விரைவில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாகவும் தனது  லேட்டஸ்ட் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். 

55
Katrina Kaif

ஆனால் தற்போதைய புதிய செய்தி ஒன்று கணவர் விக்கி கௌஷல் தரப்பில் இருந்து வெளியாகியுள்ளது. அதில், இருவரும் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், திருமண வாழ்க்கையை கொஞ்ச காலம் அனுபவிக்க இந்த தம்பதி முடிவு செய்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கத்ரினா கர்ப்பம் என சொல்லப்படும் தகவல் முற்றிலும் வதந்தியாம்.

click me!

Recommended Stories