அந்த வகையில் அவர் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் பைசன் காளமாடன் சர்ச்சையை சந்தித்துள்ளது. இந்தப் படம், சாதி வெறி, கலவரங்கள், சமூக அநீதிகளை மையமாகக் கொண்டு, கபடி விளையாட்டு மூலம் உயர்வதற்கான போராட்டத்தை சித்தரிக்கிறது. ஆனால் படம் வன்முறையை ஊக்குவிப்பதை விட, அதன் கொடுமைகளை விமர்சித்து, சமத்துவத்தை வலியுறுத்துகிறது என்கிறார்கள். 1990களின் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடக்கும் சாதிக் கலவரங்கள், தீண்டாமை கொடுமைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது பைசன் படக்கதை.
சாதியின் காரணமாக அடக்குமுறைக்கு ஆளான சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் கிட்டான் வாழ்க்கையைக் கூறுகிறது. நாயகன் கிட்டான் கபடி வீரராக வலம் வந்து சாதி தடைகள், குடும்ப எதிர்ப்பு, ஊர் கலவரங்களைத் தாண்டி தேசிய அளவில் வெற்றிபெற முயல்கிறான். சாதி தலைவர்களின் மோதல்கள், கொடூரங்கள், அரசியல் சூழல்கள் என உணர்ச்சிகளை குவித்துள்ளது.