தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, தற்போது தெலுங்கில் 3 திரைப்படத்திலும், ஹிந்தியில் 2 படங்களிலும் நடித்து வருகிறார். அதே சமயத்தில் வெப் சீரிஸில் நடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
Tammanna
தமன்னா சமீபத்தில் தனது உடல்நலப் பிரச்சினையைப் பற்றி முதல் முறையாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக அவர் கூறவில்லை என்றாலும், உடற்பயிற்சிகள் செய்வதன் அவசியம், மன அழுத்தத்தைக் கையாள்வது போன்ற விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.
சில பிரச்சனைகள் காரணமாக, சமீப காலமாக ஆர்கானிக் உணவுக்கு மாறிவிட்டதாகவும், கிரேட்ஆந்திரா.காம் உடனான நேர்காணலில், உடல்நலப் பிரச்சினையை சமாளிக்க அவர் குறிப்பிட்ட ஒரு உடற்பயிற்சியை வழக்கமாகக் கடைப்பிடிப்பதாகவும் கூறியுள்ளார்.
பொறித்த உணவுகளை முழுமையாக உட்கொள்வதை நிறுத்திவிட்டதாகவும் தெரிவித்துள்ள தமன்னா, தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்தே மஞ்சள், நெல்லிக்காய் ஜூஸ், கீரை ஜூஸ், பாதாம் பால், இளநீர் போன்ற போன்ற திரவ உணவுகளை எடுத்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளாராம்.
பிரபல வாழ்க்கை முறை பயிற்சியாளர் லூக் குடின்ஹோவுடன் இணைந்து தமன்னா ஆரோக்கியம் குறித்த புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் ஆரோக்கியம் குறித்தும் இவர் சந்தித்த உடல் நல பிரச்சனைகள் குறித்தும் பகிர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.