கடந்த சில மாதங்களாக நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம் குறித்த தகவல், தொடர்ந்து வெளியாகி வந்தாலும் இருவருமே இது குறித்து இன்னும் முழுமையாக விளக்கம் கொடுக்கவில்லை.
ஆனால் சமீபத்தில் சமந்தாவின் கணவர் நாகசைதன்யா, பிரபல ஆங்கில ஊடகத்திற்கு கொடுத்த பேட்டி ஒன்றில், நான் சிறிய வயதில் இருந்தே திரைத்துறை வாழ்க்கை வேறு, தனிப்பட்ட வாழ்க்கை வேறு என்பதை பார்த்து வளர்த்தவன். இந்த பழக்கம் என்னுடைய அம்மா அப்பாவிடம் இருந்து எனக்கு வந்தது. அவர்கள் படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர், சினிமா பற்றி எதுவும் பேச மாட்டார்கள். அது நல்ல பழக்கம் என்பதால் நானும் கடைபிடித்து வருகிறேன். சமந்தாவுடனான விவாகரத்து என்ற செய்தி பரவி வருவது எனக்கு மிகுந்த வேதனையாக இருக்கிறது. என்று தெரிவித்திருந்தது இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பது போல் அமைந்தது.
இந்நிலையில் நேற்று, சமந்தா தனது ஆடை பிராண்ட் சாகியின் முதலாம் வருட ஆண்டு விழாவைக் கொண்டாடியுள்ளார். அப்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய பதிலுக்கு மிகவும் கூலாக தன்னுடைய பதிலை அளித்தார்.
அப்போது ரசிகர் ஒருவர், சமந்தா ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு குடியேற உள்ளதாக கூறப்படுவது குறித்து கேட்டார்.
அதற்க்கு சமந்தா, இது வதந்தி என்பதை தெளிவு படுத்தியுள்ளார். இது போன்ற வதந்திகள் எங்கிருந்து தொடங்குகிறது என்பது தெரியவில்லை. என்னுடைய வீடு ஹைதராபாத்தில் தான் இருக்கிறது நான் அங்கு தான் வாழ்வேன் என பதிலளித்துள்ளார்.
இதன் மூலம், சமந்தா மும்பைக்கு செல்ல உள்ளதாக பரவி வந்த வந்தந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
சமந்தா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சமந்தா அக்கினேனி என்கிற பெயரை நீக்கியதில் இருந்து, சமந்தா - நாக சைதன்யா குறித்த வதந்தி தீயாக எரிந்து வரும் நிலையில், எப்போது இருவரும் சேர்ந்து விவாகரத்து குறித்து பரவும் தகவலுக்கு முற்று புள்ளி வைப்பார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.