இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் சத்யராஜ் ஒரு நாளைக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் சம்பளம் கேட்பதாக வெளியாகியுள்ள தகவல் தீயாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
'விக்ரம்' படத்தின் மாஸ் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கமலஹாசன் புது உற்சாகத்துடன் மீண்டும் நடிக்க துவங்கியுள்ள திரைப்படம் 'இந்தியன் 2'. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளுக்குப் பின் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. 'விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமலஹாசன் 'இந்தியன் 2' படத்தின் சம்பளத்தை உயர்த்தி விட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் சத்யராஜும் தாறு மாறாக சம்பளம் கேட்டு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
25
தமிழில், ஹீரோவாக நடித்து பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இயக்குனர் சத்யராஜ், தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து மிரட்டி வருகிறார். குறிப்பாக... பாகுபலி படத்திற்கு பின்னர் உலக அளவில் இவரது நடிப்பு ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. அதே போல் இவரும் தன்னுடைய நடிப்பில் முடிந்தவரை வித்தியாசம் காட்டி நடித்து வருகிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கேரக்டராகவே மாறி நடிக்கும் சத்யராஜை இந்தியன் 2 படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தில் வரும் முக்கியமான கதாபாத்திரமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தால் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என நினைத்து, அவரிடம் படத்தின் கதையை கூறியுள்ளார். கதையை கேட்டு விட்டு ஓகே சொல்லியுள்ளார். பின்னர் 15 நாட்கள் கால் ஷீட் வேண்டும் என கேட்ட, இயக்குனர் ஷங்கரிடம்... எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் படப்பிடிப்பை வைத்து கொள்ளுங்கள், ஆனால் ஒரு நாளைக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் என கேட்டு இயக்குனர் ஷங்கரை ஷாக் ஆக்கியுள்ளார்.
45
சத்யராஜ் நடிப்பது இந்த படத்திற்கு மிகவும் பலம் என நினைக்கும் சங்கர் அவர் கேட்கும் தொகையை கொடுத்து இந்த படத்தில் நடிக்க வைப்பாரா? அல்லது வேறு யாரையாவது நடிக்க வைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இதுவரை கமலஹாசன் சத்யராஜ் இணைந்து நடித்த காக்கிச்சட்டை, விக்ரம், போன்ற திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்ற படங்களாகவே உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து நடித்தால்... அப்போது இடம் பெரும் வசனங்கள் வேறு லெவலுக்கு ரீச் ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.