தமிழ் சினிமாவிலும் சின்னத்திரையிலும் சின்னச் சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் ரேகா நாயர். இவர் சமீபத்தில் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரின் இந்த துணிச்சலான நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தாலும், அதே நேரத்தில் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருந்தன.
இவ்வாறு பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையாக வலம் வரும் ரேகா நாயர், பேட்டி ஒன்றில் இயக்குனர் இமயம் பாரதிராஜா குறித்து உருக்கமாக பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “நான் பாரதிராஜா சாரை அவ்வப்போது பார்த்து பேசுவேன். அப்போதெல்லாம் அவர் என்னிடம் கேட்பது ஒன்றுதான், ஏன்டி நான்லாம் படம் பண்ணும்போது நீ இல்ல. அப்பல்லாம் ஏன் நீ என்ன வந்து பாக்கல. நீயெல்லாம் ஹீரோயின் மெட்டீரியல் டீ-னு சொல்வார்.