நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன.. பீச்சில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வானை பொளந்துகட்டிய இரவின் நிழல் பட நடிகை

Published : Jul 22, 2022, 07:34 AM ISTUpdated : Jul 22, 2022, 10:32 AM IST

இரவின் நிழல் படத்தில் அரை நிர்வாணமாக நடித்ததை விமர்சித்த பயில்வான் ரங்கநாதனை, நடிகை ரேகா நாயர் அடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

PREV
15
நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன.. பீச்சில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வானை பொளந்துகட்டிய இரவின் நிழல் பட நடிகை

பார்த்திபன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான படம் இரவின் நிழல். இது நான் லீனியர் முறையில் படமாக்கப்பட்ட உலகின் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படமாகும். வெளியானது முதல் இப்படத்திற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் பாக்ஸ் ஆபிஸிலும் இப்படம் நல்ல வசூல் செய்து வருகிறது. இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

25

இப்படத்திற்கு ஒருபக்கம் பாராட்டுக்கள் கிடைத்தாலும், மறுபுறம் சில சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. அது இப்படத்தில் இடம்பெற்றுள்ள நடிகைகளின் நிர்வாணக்காட்சி தான். இதில் நடிகை பிரிகிடா மற்றும் ரேகா நாயர் ஆகியோர் ஒரு சீனில் மட்டும் நிர்வாணமாக நடித்துள்ளனர். இதற்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் சில எதிர்ப்புகளும் கிளம்பின.

35

குறிப்பாக நடிகைகளின் அந்தரங்க விஷயங்கள் குறித்து யூடியூபில் பேசி சமீப காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வரும் பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் இரவின் நிழல் பற்றி பேசுகையில், பாசிடிவ்வான விமர்சனங்களை சொன்னாலும், இப்படத்தில் அரை நிர்வாணமாக ஒரு காட்சியில் நடித்திருந்த நடிகை ரேகா நாயரை இழிவுபடுத்தி பேசியதாக புகார் எழுந்தது.

இதையும் படியுங்கள்... உச்ச நட்சத்திரங்கள் வரிசையில் இணைந்துள்ள லெஜண்ட் சரவணன்!

45

இதனால் கடுப்பான ரேகா நாயர், நேற்று சென்னை திருவான்மியூர் கடற்கரையில் ஹாயாக வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நான் நிர்வாணமா நடிச்சா உனக்கென்ன என ரேகா நாயர் கேட்க, பதிலுக்கு நீ அம்மணமா நடிச்சா அப்படித்தான் பேசுவேன் என பயில்வான் கூறியதால் வாக்குவாதம் முற்றியது.

55

இதையடுத்து கோபமடைந்த ரேகா நாயர், பயில்வான் ரங்கநாதனை அடிக்க பாய்ந்தார். அப்போது அங்கிருந்தவர்கள் தடுத்து அவர்களை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேபோல் நடிகை ராதிகாவும் தன்னை இழிவாக பேசியதற்காக பயில்வான் ரங்கநாதனிடம் பெசண்ட் நகர் பீச்சில் வைத்து சண்டையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... தனுஷ் - ரூஸோ சகோதரர்களுக்கு தலபுடலாக விருந்து வைத்த அமீர் கான்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

click me!

Recommended Stories