Bangalore airport attack : பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சில மாதங்களுக்கு முன்னதாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் இந்த மகா காந்தி. அது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
28
vijay sethupathi
கைது செய்யப்பட்ட மகா காந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ‘’நான்தான் உதைத்தேன். விஜய் சேதுபதியை நான் கடவுளாக வணங்கக்கூடிய பசும்பொன் ஐயாவையும், தமிழகத்தையும் மிகவும் கேவலமாக பேசியதால் விஜய் சேதுபதியை மிதித்தேன்’’ எனத் தெரிவித்தார் மகாகாந்தி.
38
vijay sethupathi
பின்னர் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதியின் உதவியாளர் தன்னை தாக்கியதாகவும், அவமரியாதை செய்ததாக நடிகர் மகாகாந்தி என்பவர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
48
vijay sethupathi
படப்பிடிப்புக்கு சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு (Vijay Sethupathy attacked) பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
58
vijay sethupathi
சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விசாரணைக்கு வந்துள்ளது.
68
vijay sethupathi attacked
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பவும், 294(b),323,500 மற்றும் 506(பி), 323,500 மற்றும் 506 இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றும் மனுவில் மகா காந்தி கேட்டுக் கொண்டு உள்ளார்.
78
vijay sethupathy
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது..அப்போது இந்த வழக்கு தொடர்பாக விஜய்சேதுபதி மீது விசாரணை நடவடிக்கை எடுக்க கூடாதென வாதிடப்பட்டுள்ளது..
88
vijay sethupathi
விசாரணை முடிவில் பெங்களூரு விமான நிலைய தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய்சேதுபதி மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..