இஸ்ரேலின் சுற்றுலாத்தலமான எய்லட்டில் நடைபெற்ற மிஸ் யுனிவர்ஸுக்கான போட்டியில், பஞ்சாப்பை சேர்ந்த 21 வயதான ஹர்னாஸ் கவுர் சாந்து 2021 -ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறார்.
முன்னதாக Harnaaz Sandhu 2017 ஆம் ஆண்டு டைம்ஸ் ஃப்ரெஷ் ஃபேஸ் பேக் மூலம் தனது அழகுப் போட்டி பயணத்தைத் தொடங்கினார். 21 வயதான Harnaaz Sandhu தற்போது பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பைப் படித்து வருகிறார்.ஏற்கனவே மிஸ் இந்தியா பஞ்சாப் 2019 போன்ற பல போட்டி பட்டங்களை அவர் பெற்றுள்ளார். பல பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.