Katrina Kaif: திருமண லெஹங்காவில் சிவப்பு ரோஜா போல் மின்னிய கத்ரீனா! உருக்கமான பதிவுடன் வெளியிட்ட புகைப்படங்கள்

Published : Dec 13, 2021, 12:53 PM IST

நடிகை கத்ரீனா கைப் (Katrina Kaif) நேற்று தன்னுடைய மெஹந்தி புகைப்படங்களை வெளியிட்ட நிலையில், தற்போது தன்னுடைய திருமண லெஹங்காவில் பேரழகியாய் ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  

PREV
15
Katrina Kaif: திருமண லெஹங்காவில் சிவப்பு ரோஜா போல் மின்னிய கத்ரீனா! உருக்கமான பதிவுடன் வெளியிட்ட புகைப்படங்கள்

கத்ரீனா - விக்கி ஜோடியின் திருமண விழா ராஜஸ்தானில் உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் மூன்று நாட்கள் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், தினமும் தங்களுடைய திருமண சடங்குகள் குறித்த புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.

 

 

25

அந்த வகையில் தற்போது நடிகை கத்ரீனா கைப், திருமண கோலத்தில் ராயலான சிவப்பு நிற லெஹங்கா அணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

35

விக்கி கௌஷல் பாரம்பரிய திருமண கலாச்சாரத்திற்கு ஏற்ற போல் சிவப்பு நிற லெஹன்காவில் ரோஜா மலரை மிஞ்சும் அழகில் ஜொலிக்கிறார் கத்ரீனா.

 

 

45

கையில் நீண்ட அலங்காரம் செய்யப்பட்ட வளையல்கள், உடைக்கு ஏற்ற போல் கழுத்தில் வைரத்தால் ஆன சோக்கர் நெக்லஸ், நெற்றியில் சிவப்பு நிற போட்டு... ஜிமிக்கி கம்மல் என திருமண கலையோடு அழகும் இவர் முகத்தில் கலைக்கட்டியுள்ளது.

 

 

55

இந்த புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் உருக்கமாக கத்ரீனா போட்டுள்ள பதிவில்... "வளர்ந்த பிறகு, எங்கள் சகோதரிகள் எப்போதும் ஒருவரையொருவர் பாதுகாத்தோம். அவர்கள் எப்போதும் எனக்கு வலிமை சேர்க்கும் தூண்கள், நாங்கள் ஒருவரையொருவர் நிலைநிறுத்தி கொண்டோம்… அது எப்போதும் அப்படியே இருக்கட்டும் என கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

 

click me!

Recommended Stories