இசை அமைப்பாளர் இளையராஜா, சமீபத்தில் நியூயார்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தில் தனது விளம்பர பலகையை அறிமுகம் செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வெளியான வைரலாகி வருகிறது.
இது குறித்த புகைப்படங்களை இசை மன்னன், இசை கடவுள் என ரசிகர்களால் அழைக்கப்படும் இளையராஜா அதிகார பூர்வமாக பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில் நியூயார்க் நகரத்தில் உள்ள டைம்ஸ் ஸ்கொயர் பில்போர்டில் காட்டப்பட்ட அவரது விளம்பரத்தின் புகைப்படங்களைப் இடம்பெற்றுள்ளது.
மியூசிக் செயலியான Spotify உடன் இளையராஜா இணைந்துள்ள விளம்பரப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த விளம்பரம் உள்ளது. நியூயார்க்கில் இளையராஜாவின் போஸ்டரைப் பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சமீபத்தில், இளையராஜா Spotify உடன் இணைந்த தகவல் அதிகார பூர்வமாக வெளியிடப்பட்டது, Spotify இல் தனது பிளேலிஸ்ட்களை விளம்பரப்படுத்த மூன்று நிமிட விளம்பரப் படத்திலும் நடித்திருந்தார்.
இந்நிலையில் நவம்பர் 19 அன்று டைம்ஸ் ஸ்கொயர் விளம்பரப் பலகையில் இளையராஜாவின் பேனர் ஒளிபரப்ப பட்டுள்ளது. இந்த புகைப்படங்களை புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட இளையராஜா, "இந்த மிகவும் புனிதமான நாளில், நியூயார்க்கில் உள்ள பில்போர்ட்ஸ் ஆஃப் டைம் சதுக்கத்தில் "இசையின் ராஜா"... ராஜா விதிகள் என பதிவு செய்துள்ளார்.