'மெட்ராஸ் கபே' என்ற ஹிந்தி படத்தின் மூலமாக ராஷி கண்ணா தன்னுடைய அறிமுகத்தை கொடுத்திருந்தாலும், இவருக்கு கை கொடுத்து தூக்கி விட்டது, டோலிவுட் மற்றும் கோலிவுட் படங்கள் தான்.
தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ள இவர், தன்னுடைய படங்களில் ஓவர் கவர்ச்சியை அள்ளி வீசாமல் அளவான கவர்ச்சியை காட்டி ரசிகர்களை வசீகரித்து வருகிறார்.
தமிழில் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.
சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான 'அரண்மனை 3 ' படத்திலும் நடித்துள்ளார்.
கொஞ்சம் கும்முன்னு பப்ளி தோற்றத்தில் வலம் வந்த ராஷி கண்ணா. தனது உடல் எடையை குறைத்து தற்போது சிக்கென மாறியுள்ளார்.
ஸ்லிம் லுக்கிற்கு மாறியதுமே அவ்வபோது படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து இளம் ரசிகர்கள் கண்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஸ்டேஜ் ஃபர்பார்மென்ஸ் செய்து, தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தியுள்ள இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
இந்த நடனத்திற்காக இவர் அணிந்திருக்கும் உடை வேறு லெவலுக்கு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆடை பளீச் என மின்னும் அழகிய கற்கள் பாதிக்கப்பட்டு ராஷி கண்ணா அழகை மேலும் கூடியுள்ளது.
அந்த உடையுடன் தினுசு தினுசாக தபோது போஸ் கொடுத்து அசத்தியுள்ளார் ராஷி கண்ணா. இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.