திருமணத்திற்குப் பின்பு திரையுலகில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு டாட்டா காட்டி விட்டு, கிடைத்த குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு மத்தியில், திருமணத்திற்குப் பின்பும் தமிழ், தெலுங்கு, என இரண்டு திரையுலகிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து பட்டையை கிளப்பி வருபவர் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் இவரது மார்க்கெட்டை சரிய விடாமல் கூட்டியது.