Director Pa Ranjith
Hyderabad Assistant Commissioner Advises to Watch Pa Ranjith Movies : தமிழ் சினிமாவில் எத்தனையோ இயக்குநர்கள் இருந்தாலும் பா ரஞ்சித் மாதிரி வர முடியாது, அவரது படைப்புகள் அருமையாக இருக்கும் என்று ஹைதராபாத் உதவி கமிஷனர் கூறியிருக்கிறார். அட்டகத்தி படம் மூலமாக இயக்குநராக அறிமுகம் எடுத்தவர் பா ரஞ்சித். ரொமாண்டி காதல் கதையை மையப்படுத்தியப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.
Pa Ranjith, Madras Movies
மெட்ராஸ்:
அதன் பிறகு மெட்ராஸ் படத்தை இயக்கினார். இந்த படத்தில் கார்த்தி, கலையரசன், ரித்விகா, கேத்ரின் தெரேசா, மைம் கோபி ஆகியோர் பலர் நடித்திருந்தனர். முழுக்க அடையாளத்திற்காக இரு அரசியல் கட்சிகளுக்கு இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதை. இப்படம் கொடுத்த வரவேற்பைத் தொடர்ந்து ரஜினிகாந்தை வைத்து காலா, கபாலி என்று அடுத்தடுத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார்.
Pa Ranjith, Kabali Movie
கபாலி:
கோலாலம்பூரைச் சேர்ந்த கபாலீஸ்வரன் என்ற கபாலி செய்யாத குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறையில் கழித்து அதன் பிறகு சிறையிலிருந்து ரிலீஸாகி வந்து தன்னுடைய மனைவியை கொன்றவர்களை கொலை செய்ய புறப்படுகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் கபாலி. இந்தப் படத்தில் ரஜினிகாந்திற்கு ஜோடியாக ராதிகா ஆப்தே, கிஷோர், தினேஷ், கலையரசன், ஜான் விஜய், ரித்விகா, நாசர், தன்ஷிகா ஆகியோர் பலர் நடித்திருந்தனர். கபாலி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது.
Pa Ranjith Filmography, Kaala Movie
காலா:
தாராவியை கைப்பற்ற நினைக்கும் அரசியல்வாதிக்கும் தாராவி ஜனங்களுக்காக போராடும் ரஜினிகாந்திற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் தான் காலா. இந்தப் படத்தில் ரஜினிகாந்த் உடன் இணைந்து நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஸி, சமுத்திரக்கனி, அஞ்சலி படேல், மணிகண்டன், அருள் தாஸ், அரவிந்த் ஆகாஸ், சாக்ஷி அகர்வால் ஆகியோர் பலர் நடித்திருந்தனர். இந்த படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனம் பெற்றது.
Director Pa Ranjith Movies
சார்பட்டா பரம்பரை:
காலா படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் கழித்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை பா ரஞ்சித் இயக்கினார். அதோடு, இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்தார். ஆர்யா, துஷாரா விஜயன், பசுபதி, ஜான் விஜய், கலையரசன், ஜான் கொக்கைன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவான சார்பட்டா பரம்பரை கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்தது. குத்துச்சண்டையை மையப்படுத்திய இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
Thangalaan, Pa Ranjith Movie
தங்கலான்:
கடைசியாக தங்கலான் கதையை இயக்கினார். விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லோராலும் பேசப்பட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்திற்கு விக்ரமுக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்பது சினிமா விமர்சகர்களின் கருத்து.
Pushpa 2, Allu Arjun
இப்படி தன்னுடைய ஒவ்வொரு படைப்புகளை மாறுபட்ட கோணத்தில் கருத்துள்ள படமாக எடுத்து சிறந்த இயக்குநர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித்தின் படங்களை பாருங்கள் என்று ஹைதராபாத் துணை காவல் ஆணையர் விஷ்ணு மூர்த்தி கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஹைதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் போது ரேவதி என்ற பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் புஷ்பா 2 மாதிரியான படங்களை பார்ப்பதற்கு பதிலாக நல்ல கருத்துள்ள படங்களை கொடுக்கும் பா ரஞ்சித் படங்களை ரூ.4000 செலவு செய்து கூட பாருங்கள். புஷ்பா 2 மாதிரியான படங்களை ஓடிடி தளத்தில் கூட பார்க்கலாம் என்று கூறியிருக்கிறார்.