samantha :இன்ஸ்டாகிராம் மூலம் மட்டும் நடிகை சமந்தாவுக்கு இவ்வளவு வருமானமா.. ஒரு போஸ்ட் போட்டாலே ஓஹோனு வாழலாமே!

Ganesh A   | Asianet News
Published : Mar 30, 2022, 10:59 AM IST

samantha : நடிகை சமந்தா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். 

PREV
15
samantha :இன்ஸ்டாகிராம் மூலம் மட்டும் நடிகை சமந்தாவுக்கு இவ்வளவு வருமானமா.. ஒரு போஸ்ட் போட்டாலே ஓஹோனு வாழலாமே!

விடிவி மூலம் அறிமுகம்

தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பேமஸ் ஆன இவர், பின்னர் கோலிவுட்டில் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் போன்ற உச்ச நட்சத்திரங்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

25

விவாகரத்தில் முடிந்த காதல் திருமணம்

இவர் கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வந்தார் சமந்தா. கடந்தாண்டு நடிகர் நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

35

சினிமாவில் பிசி

விவாகரத்துக்கு பின் சினிமாவில் நடிகை சமந்தாவின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துள்ளது. இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதுதவிர யசோதா, சகுந்தலம், அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் போன்ற படங்களையும் கைவசம் வைத்துள்ளார்.

45

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவ்

நடிகை சமந்தா படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இயங்கி வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களை கவரும் விதமாக அவ்வப்போது போட்டோக்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் சமந்தா. சில சமயங்களில் வர்த்தக நிறுவனங்களின் தயாரிப்புகளை புரமோட் செய்யும் விதமாகவும் அதில் சில பதிவுகளை பதிவிடுவார்.

55

இன்ஸ்டாகிரம் மூலம் இவ்வளவு வருமானமா?

இந்நிலையில், நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் புரமோட் செய்வதற்காக போடும் ஒரு போஸ்ட்டுக்கு ரூ.8 முதல் ரூ.10 லட்சம் வரை சம்பளமாக வாங்கி வருகிறாராம். தற்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்ததன் மூலம் சினிமாவில் தனது மார்க்கெட் உயர்ந்துள்ளதால் இனி இன்ஸ்டாகிராமில் புரமோட் செய்வதற்கு ரூ.12 முதல் 15 லட்சம் வரை வாங்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம்.

இதையும் படியுங்கள்... Beast Teaser update : பீஸ்ட் டீசரில் அந்த ஒரு விஷயம் மட்டும் இருக்காதாம்... டுவிஸ்ட் வைக்கும் நெல்சன்

Read more Photos on
click me!

Recommended Stories