ஆகஸ்ட் 1ந் தேதி மட்டும் 14 படங்கள் ரிலீஸ்... இந்த வார தியேட்டர் மற்றும் ஓடிடி வெளியீடுகள் ஒரு பார்வை

Published : Jul 28, 2025, 01:47 PM IST

ஆகஸ்ட் 1ந் தேதி திரையரங்குகளில் 10 தமிழ் படங்களும், ஓடிடியில் நான்கு தமிழ் படங்களும் ரிலீஸ் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

PREV
14
August 1 Theatre and OTT Release Movies

2025-ம் ஆண்டு ஜெட் வேகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது தான் தொடங்கியது போல் இருந்தது. அதற்குள் கடகடவென 7 மாதங்கள் முடிவடையப்போகிறது. இந்த 7 மாதங்களில் பல வெற்றி தோல்விகளை சந்தித்துள்ள தமிழ் சினிமா, அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்திற்குள் அடியெடுத்து வைக்கிறது. ஆகஸ்ட் மாதம் முதல் தேதியே பல படங்கள் ரிலீஸுக்கு வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வகையில் ஆகஸ்ட் 1-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் மொத்தம் 14 படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாம். அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
ஆகஸ்ட் 1ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி ரஜினிகாந்த் நடித்த கூலி படம் ரிலீஸ் ஆவதால், அதன் அருகில் ரிலீஸ் ஆக பயந்து ஏராளாமான சின்ன படங்கள் ஆகஸ்ட் 1ந் தேதி திரைக்கு வருகின்றன. அந்த பட்டியலில் உதயா - யோகிபாபு நடித்த அக்யூஸ்ட், வெற்றி நாயகனாக நடித்த முதல் பக்கம், புதுமுகங்கள் நடித்துள்ள போகி, கதிர் நாயகனாக நடித்த மீஷா, டிஜே அருணாச்சலம், பிக்பாஸ் ஜனனி ஜோடியாக நடித்த உசுரே, பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள சரண்டர் உள்ளிட்ட சின்ன பட்ஜெட் படங்களும் அந்த பட்டியலில் அடங்கும். இதனுடன் தனுஷ் நடித்த முதல் இந்திப் படத்தின் தமிழ் பதிப்பான அம்பிகாபதியும் ஆகஸ்ட் 1ந் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது.

34
பிளாக் மெயில் உடன் மோதும் ஹவுஸ் மேட்ஸ்

ஆகஸ்ட் 1-ந் தேதி ரிலீஸ் ஆகும் படங்களில் சற்று பரிட்சயமான படங்கள் என்றால் அது ஜிவி பிரகாஷ் குமார் நடித்துள்ள பிளாக்மெயில் மற்றும் தர்ஷன் நாயகனாக நடித்துள்ள ஹவுஸ்மேட்ஸ் தான். இதில் பிளாக்மெயில் படத்தை மு மாறன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். அதேபோல் தர்ஷன் நடித்த ஹவுஸ்மேட்ஸ் திரைப்படத்தை ராஜவேல் இயக்கி உள்ளார். இப்படத்தை சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வழங்குகிறது. இப்படங்களுடன் விஜய் டிவி புகழ் நடித்த மிஸ்டர் ஜூ கீப்பர் திரைப்படமும் ஆகஸ்ட் 1ந் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது ஜூலை 31-ந் தேதி விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படம் திரைக்கு வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

44
ஆகஸ்ட் 1ந் தேதி ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள்

ஆகஸ்ட் 1-ந் தேதி ஓடிடியில் மொத்தம் 4 தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதன்படி விக்ரம் பிரபு நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் அமோக வரவேற்பை பெற்ற லவ் மேரேஜ் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதனுடன் ராம் - மிர்ச்சி சிவா கூட்டணியில் உருவான பறந்து போ திரைப்படமும் அன்றைய தினம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. மேலும் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த், சரத்குமார், தேவையானி நடித்த சூப்பர் ஹிட் படமான 3 பிஹெச்கே வருகிற ஆகஸ்ட் 1ந் தேதி முதல் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. அதேபோல் விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக நடித்த பீனிக்ஸ் வீழான் திரைப்படமும் அன்றைய தினம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆக உள்ளதாம்.

Read more Photos on
click me!

Recommended Stories