'அன்பு ஜெயிக்கும்'.... என்று திரும்ப திரும்ப கூறியதாலேயே, இவர் மீது சிலருக்கு வெறுப்பும் வர துவங்கியது. இவருக்கென ஒரு கூட்டமும் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்ததால், குரூப்பிஸம் இருப்பதாக பலரும் விமர்சித்தனர்.
மேலும் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த வரை, ரியோ, நிஷா, சோம் உள்ளிட்ட பலர் இவரை சார்ந்து விளையாடுவது போல் தெரிந்ததே... இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற காரணமாக அமைந்தது.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர், மீண்டும் வழக்கம் போல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கலக்கி வருகிறார். குறிப்பாக விஜய் டிவியில் பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடிவரும், 'காதலே காதலே', 'ஓல்டு இஸ் கோல்டு' போன்ற நிகழ்ச்சிகள் ஆகும்.
இந்நிலையில் இவருக்கு திடீர் என மூளை அருகே ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடைபெற உள்ளதாக கூறி இவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, நான் எப்போதும் என் இதயத்தில் இருந்து அதிகம் செயல்பட்டு வருவதால் எனது மூளை வருத்தமடைந்து விட்டது. இதயத்தைவிட நான் சக்தி வாய்ந்தவன் என்பதை நிரூபிப்பது போல் தெரிகிறது. இப்போது எனது மூளை அருகே ஒரு சிறிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து நான் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறேன்.
எம்ஆர்ஐ ஸ்கேன் செய்ததில் எனக்கு மூளை அருகே பிரச்சனை இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நாளை காலை 7 மணி முதல் 11 மணி வரை எனக்கு அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது.
இதன் காரணமாக பலருடைய போன் அழைப்புகளை என்னால் எடுக்க முடியாமல் போகலாம். ஆனால் அதே நேரத்தில் எனது மகள் ஜாரா எனது உடல் நலம் குறித்த அப்டேட்டை தெரிவிப்பார் என்பதை உறுதி கூறுகிறேன். இந்த இக்கட்டான நிலையை எதிர்த்துப் போராடி நான் மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் விரைவில் இவர் மீண்டு வரவேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.