பிரபல மலையாள நடிகையான மிருதுளா விஜய். தமிழில் நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் உள்பட சில தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பின்னர் தமிழ் பட வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்தி கவனம் செலுத்த துவங்கினார். அந்த வங்கியில் இவர் நடிப்பில் வெளியான, பிரிட்டீஷ் பங்களா, செலிபிரேசன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.
மேலும் சில தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார்.
இவருக்கும் மலையாள சின்னத்திரை நடிகர் யுவ கிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயிக்க பட்டநிலையில், கொரோனா பேரிடர் காரணமாக திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று ஜூலை 8 ஆம் தேதி மிருதுளா விஜய் - யுவகிருஷ்ணா தம்பதிகளுக்கு திருவனந்தபுரத்தில் கோலாகலமாக திருமனம் நடந்து முடித்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நடந்த இவர்களது திருமணத்தில், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு மிருதுளா - யுவ கிரிஷானா தம்பதியை வாழ்த்தினர்.
மேலும் ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை இவர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.