Rajinikanth - Sun Pictures Combo : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். அதில் ஹிட் படங்கள் என்னென்ன, பிளாப் படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
சினிமாவில் ஹீரோ - ஹீரோயின், ஹீரோ - டைரக்டர், ஹீரோ - இசையமைப்பாளர் காம்போ அதிகளவில் இருக்கும். ஆனால் ஹீரோ - தயாரிப்பாளர் காம்போ மிகவும் அரிதானது. ஒரு தயாரிப்பாளர் ஒரு ஹீரோ மீது மதிப்பும், மரியாதையும் வைத்திருந்தால் தான் அவருடன் தொடர்ந்து பயணிப்பார். அப்படி தமிழ் சினிமாவில் ஒரு பிளாக்பஸ்டர் காம்போவாக வலம் வருபவர்கள் தான் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி. இவர்களின் காம்போவில் மொத்தம் 6 படங்கள் வந்துள்ளன. அதில் எந்தெந்த படங்கள் ஹிட்டாகின, எவை பிளாப் ஆகின என்பதை பார்க்கலாம்.
25
முதல் படமே பிரம்மாண்ட வெற்றி
சன் பிக்சர்ஸ் உடன் ரஜினிகாந்த் முதன்முதலில் கூட்டணி அமைத்த படம் எந்திரன். சிவாஜி என்கிற மாஸ் ஹிட் கொடுத்த பின் ஷங்கரும், ரஜினிகாந்தும் இணைந்த படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் பிரம்மாண்டமாக அப்படத்தை எடுக்க முடிவு செய்திருந்தார் ஷங்கர். அவரின் பிரம்மாண்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறனும் அப்படத்திற்காக பணத்தை வாரி இறைத்திருந்தார். அதன் ரிசல்டாக படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு அந்த காலகட்டத்திலேயே 300 கோடிக்கும் மேல் வசூலித்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகிற்குமே ஒரு டிரெண்ட் செட்டர் படமாக அமைந்தது.
35
8 ஆண்டுகளுக்கு பின் இணைந்த கூட்டணி
எந்திரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் ரஜினிகாந்த் உடன் இணைந்து சுமார் 8 ஆண்டுகள் படம் பண்ணாமல் இருந்தது சன் பிக்சர்ஸ். அதன் பின்னர் 2019ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளிவந்த படம் தான் பேட்ட. ரஜினிகாந்தின் ஃபேன் பாய் சம்பவமாக இப்படத்தை செதுக்கி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இப்படம் விமர்சன ரீதியாக சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக 250 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றியடைந்தது. இப்படத்துக்கு பின் பேட்ட 2ம் பாகம் உருவாகும் என பேச்சு அடிபட்டது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஓகே சொல்லவில்லை.
ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணியின் ஒரே ஒரு பிளாப் படம்
பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்தார் ரஜினிகாந்த். அப்படத்தையும் சன் பிக்சர்ஸ் தான் தயாரித்தது. விஸ்வாசம் என்கிற கிராமத்து கதையம்சம் கொண்ட மாஸ் ஹிட் படத்தை கொடுத்த கையோடு சிறுத்தை சிவா இயக்கிய படம் இது என்பதால் இப்படத்தை ரசிகர்கள் மலைபோல் நம்பி இருந்தனர். ஆனால் அண்ணாத்த படம் கடந்த 2021-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி பிளாப் ஆனது. அப்படத்தின் தோல்விக்கு கொரோனா காலகட்டமும் ஒரு காரணமாக அமைந்தது. அந்த சமயத்தில் ஊரடங்கு போடப்பட்டதால் படப்பிடிப்பை எதிர்பார்த்தபடி நடத்த முடியாமல், கதையையிலும் சில மாற்றங்களை செய்து எடுத்தனர்.
55
ஹாட்ரிக் ஹிட் கொடுத்த ரஜினி - சன் பிக்சர்ஸ் கூட்டணி
அண்ணாத்த தோல்விக்கு பின் ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த ரஜினிகாந்த், சன் பிக்சர்ஸ் உடன் இணைந்து ஜெயிலர் என்கிற மாஸ் ஆக்ஷன் படத்தை கொடுத்தார். அப்படத்தின் அதிரிபுதிரியான வெற்றிக்கு பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்தையும் சன் பிக்சர்ஸ் பேனரின் கீழ் நடித்தார் ரஜினி. அப்படமும் 500 கோடிக்கு மேல் வசூல் அள்ளி ஹிட் அடித்தது. இதையடுத்து இந்த ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இப்படம் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி வசூல் படமாக அமைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.