பிக்பாஸில் ஹிப்ஹாப் ஆதி.... திடீர் என்ட்ரியால் ஷாக் ஆன போட்டியாளர்கள்- வைரலாகும் புகைப்படங்கள்

Ganesh A   | Asianet News
Published : Dec 19, 2021, 06:40 PM IST

ஹிப்ஹாப் ஆதி (hiphop aadhi) நடிப்பில் உருவாகி இருக்கும் அன்பறிவு (anbarivu) படத்தை புரமோட் செய்ய அப்படத்தின் குழுவினர் பிக்பாஸ் (biggboss 5) நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர்.

PREV
16
பிக்பாஸில் ஹிப்ஹாப் ஆதி.... திடீர் என்ட்ரியால் ஷாக் ஆன போட்டியாளர்கள்- வைரலாகும் புகைப்படங்கள்

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. பரபரப்புக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்கள் முடிந்துள்ளது. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின் ராவ், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.

26

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் (BiggBoss 5) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி 70 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. 

36

புதிதாக திரைக்கும் வர இருக்கும் படங்களை அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புரமோட் செய்யப்படுவது வழக்கம். அதன்படி படக்குழுவினர் சிலர் பிக்பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸாக சென்று தங்களது படத்தை புரமோட் செய்வர், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பபடாமல், கமலுடன் மட்டும் கலந்துரையாடிவிட்டு செல்கின்றனர்.

46

இந்நிலையில், ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகி இருக்கும் அன்பறிவு படத்தை புரமோட் செய்ய அப்படத்தின் குழுவினர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். 

56

ஹிப்ஹாப் ஆதி, இப்படத்தின் இயக்குனர் அஸ்வின் ராம் மற்றும் தயாரிப்பாளர் தியாகராஜன் ஆகியோர் பிக்பாஸ் செட்டில் கமலுடன் கலந்துரையாடிய படி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

66

அன்பறிவு திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி மாதம் 7-ந் தேதி நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இப்படத்தில் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காஷ்மிரா நடித்துள்ளார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories