விஸ்கி விக்கும் நடிகைகள்.. பட வாய்ப்பு இல்லைன்னா இப்படி எல்லாமா..? ஷாக் போட்டோஸ்..

Kanmani P   | Asianet News
Published : Dec 29, 2021, 11:20 AM IST

சமீபகாலமாக ஹீரோயின்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பல்வேறு தயாரிப்புகளை விளம்பரம் செய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். தற்போது தமிழ் முன்னணி நடிகைகளான பூஜா ஹெக்டே, காஜல் அகர்வால், ராய் லட்சுமி, ஹன்சிகா உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மதுபானம் அருந்துவதாக விளம்பரம் செய்து வருவது சில ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

PREV
110
விஸ்கி விக்கும் நடிகைகள்.. பட வாய்ப்பு இல்லைன்னா இப்படி எல்லாமா..? ஷாக் போட்டோஸ்..
kajan in whisky advertisements

தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான காஜல் அகர்வால் தனது கணவர் மற்றும் மதுபானத்துடன் ஒரு படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டார் மற்றும் கலப்பட ஸ்காட்ச் விஸ்கியை விளம்பரப்படுத்தினார்.

210
kajan in whisky advertisements

இந்த புகைப்படத்துடன் "பொறுப்புடன் குடிக்கவும். உள்ளடக்கம் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே" என்ற மறுப்புரையையும் காஜல் சேர்த்துள்ளார். இது தொடர்பாக காஜல் பல விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதோடு சாப்பாட்டில் சாப்பாட்டுடன் மது அருந்துவது போன்ற விளம்பரத்திற்கு ரசிகர்களும், நெட்டிசன்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

310
Regina Cassandra

தமிழில் 'கண்ட நாள் முதல்' படத்தின்  மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா கசான்ட்ரா. அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் ரெஜினா சமீபத்தில் மதுபான விளம்பரத்தில் தோன்றியது ரசிகர்களை மிகுந்த வருத்தத்திற்கு ஆளாக்கி இருந்தது.

410
Hansika Motwani

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய கொழு கொழு அழகால் ரசிகர்களை முதல் படத்திலேயே கவர்த்திழுத்தவர். ஆனால் தன்னுடைய கொழு கொழு அழகால் தான் பட வாய்ப்புகள் பறிபோவதாக எண்ணி, உடை எடையை கணிசமாக குறைக்க துவங்கினார்.

510
Hansika Motwani

சமீபத்தில் ஹன்ஷிகா சர்ச்சை புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப்பாக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஸ்கி பாட்டில் ஒருபுறம், விஸ்கி டம்ளர் ஒருபுறம், சைடிஸ் ஒருபுறம் என கிக்காக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. 

610
Raai Lakshmi

லட்சுமி ராய், படவாய்ப்புகளை வளைப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் துபாய்க்கு இன்பச்சுற்றுலா போன லட்சுமி ராய், அங்கு கடற்கரையில் பிகினி உடையில் ஆட்டம் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. 

710
Raai Lakshmi

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் முக்கியமாகப் பணியாற்றும் கவர்ச்சி கன்னியாக ராய் லட்சுமி. அவர் ஜப்பானின் "டோக்கி விஸ்கி" ஐ விளம்பரப்படுத்தும் இன்ஸ்டாகிராம் இடுகையை தனது வசீகரிக்கும் புகைப்படத்துடன் பகிர்ந்துள்ளார்.  இந்த பதவிக்காக அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

810
payal rajput

நடிகை பாயல் ராஜ்புட் அவ்வப்போது, கவர்ச்சியில் ரசிகர்களை மயக்கும் விதமாக விதவிதமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள நிலையில், கிவகிர் விஸ்கி பாட்டிலுடன் கொடுத்த போஸ் பல விமர்சனங்களுக்கு ஆளானது.

910
Pooja Hegde

தமிழில் இயக்குனர் மிஷ்கின், நடிகர் ஜீவாவை வைத்து இயக்கிய திரைப்படம் 'முகமூடி' . இந்த படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் பூஜா ஹெக்டே. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது விஜயின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வரும் பூஜா விஸ்கி விளம்பரத்தில் தோன்றி ரசிகர்களை அதிர்ச்சியாக்கினார்.

1010
Pooja Hegde

பூஜா ஹெக்டே ஏற்கனவே கடந்த வருடம் தனது தந்தையுடன் விஸ்கி விளம்பரத்தில் தோன்றியிருந்தார். இதையடுத்து தற்போதும் விஸ்கி விளம்பர வீடியோவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டு விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார் பூஜா.

Read more Photos on
click me!

Recommended Stories