அட்டக்கத்தி, மெட்ராஸ், காலா, கபாலி, சார்பட்டா பரம்பரை என தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பா.இரஞ்சித். இவர் இயக்கத்தில் தற்போது நட்சத்திரங்கள் நகர்கிறது என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் என ஏராளமான இளம் நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
24
இதையடுத்து பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படம் சியான் 61. நடிகர் விக்ரம் நாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. கே.ஜி.எஃப்.பில் 19-ம் நூற்றாண்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதையை இயக்குனர் பா.இரஞ்சித் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.
3டி தொழில்நுட்பத்திலும் படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். இப்படத்தில் விக்ரமுடன் நடிகர் கலையரனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
44
இந்நிலையில், சியான் 61 படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகை ராஷ்மிகா மந்தனா விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உறுதியானால் நடிகை ராஷ்மிகா, விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கும் முதல் படமாக இது அமையும் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.