இந்த தொடரின் மூலம் பிரபலமான மவுனி ராய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத்தொடங்கின. இவர் கவர்ச்சி ரோலிலும் தயக்கமின்றி நடித்து வருகிறார். அந்த வகையில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் மவுனி.