ரிலீசுக்கு ரெடியான பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரை காண உள்ளது.