பாலிவுட்டின் கனவுக்கன்னியாக வலம் வந்த திருச்சி பொண்ணு ஹேம மாலினி... இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

Published : Nov 11, 2025, 11:49 AM IST

பாலிவுட்டின் கனவுக்கன்னி ஹேம மாலினி, சினிமா மட்டுமின்றி அரசியல், பிசினஸிலும் கொடிகட்டிப் பறந்து பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை தன் வசமாக்கி இருக்கிறார். அவரின் சொத்து மதிப்பு பற்றி பார்க்கலாம்.

PREV
15
Hema Malini Net Worth

பாலிவுட் திரையுலகில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் ஹேமமாலினி. தற்போது அரசியலில் பிசியாக இருக்கும் ஹேமா, கடைசியாக 2020-ல் வெளியான 'ஷிம்லா மிர்ச்' திரைப்படத்தில் நடித்திருந்தார். இருப்பினும், அந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. ஹேம மாலினி ஒரு நடிகை, திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒரு சிறந்த நடனக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

25
அரசியலில் பிசியான ஹேம மாலினி

அவர் தனது அரசியல் வாழ்க்கையை 2003-ல் தொடங்கினார். 2003 முதல் 2009 வரை மாநிலங்களவை எம்.பி.யாகப் பணியாற்றினார். பின்னர், 2010-ல், அவர் பாஜகவின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு, 2019-ல் இரண்டாவது முறையாகவும் வெற்றி பெற்றார். தற்போது 2024 தேர்தலிலும் மதுரா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ளார்.

35
ஹேம மாலினி சொத்து மதிப்பு

மதுரா தொகுதி பாஜக எம்.பி.யான ஹேம மாலினி, 2024 மக்களவைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்தபோது, தனது மொத்த சொத்து மதிப்பு 123.6 கோடி ரூபாய் என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார். இதில், அவரது மொத்த சொத்துக்கள் 122.19 கோடி ரூபாயாகவும், அவருக்கு 1.42 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
ஹேம மாலினி கார் கலெக்‌ஷன்

ஹேம மாலினி திரைப்படங்களில் இருந்து விலகி இருந்தாலும், விளம்பரங்கள், பிசினஸ் மற்றும் வாடகைகள் மூலம் பெரும் வருமானம் ஈட்டுகிறார். சென்னை, மும்பை, புனே, பிருந்தாவனம், ஜெய்ப்பூர் போன்ற பல்வேறு நகரங்களில் ஹேம மாலினிக்கு சொத்துக்கள் உள்ளன. கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட அவரிடம் மெர்சிடிஸ் பென்ஸ், ஆடி க்யூ5, அல்-காசர், மாருதி ஈக்கோ போன்ற கார்கள் உள்ளன.

55
தமிழ்நாட்டில் பிறந்த ஹேமமாலினி

நடிகை ஹேம மாலினி தமிழ்நாட்டில் தான் பிறந்தார். அம்மன்குடி என்கிற கிராமத்தில் 1948-ம் ஆண்டு பிறந்த ஹேம மாலினி, 1963-ம் ஆண்டு வெளியான ‘இது சத்தியம்’ என்கிற தமிழ் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து பாலிவுட்டுக்கு சென்ற அவர் அங்கு அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து கனவுக்கன்னியாக உருவெடுத்தார். 1980-ம் ஆண்டு நடிகர் தர்மேந்திராவிற்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்ட ஹேமமாலினிக்கு அஹானா தியோல், ஈஷா தியோல் என இரு மகள்கள் உள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories