ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு புனேவில் மிகவும் பரபரப்பாக நடந்து வந்த நிலையில், திடீர் என ஷாருகான் மகன் ஆர்யன் கான் (Aryan Khan) போதை மருந்து வழக்கில் கைது செய்யப்பட்டதால், தன்னுடைய அனைத்து பணிகளையும் தாற்காலிககமாக நிறுத்தி வைத்துள்ளார்.
ஷாருக்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால், நயன்தாராவின் கால் ஷீட் வீணாவகாகவும் இதன் காரணமாக நயன்தாரா ஷாருகான் படத்தில் இருந்து, விலகி விட்டதாகவும் தகவல் வெளியானது.
மேலும் நயன்தாராவுக்கு பதிலாக சமந்தா நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே நயன்தாரா சில காட்சிகளில் நடித்துள்ளது போதிலும், அந்த காட்சிகளை மீண்டும் சமந்தாவை வைத்து படமாக்க முடிவு செய்ததாகவும் கூறப்பட்டது.
தீயாக பரவி வந்த இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, படக்குழு தற்போது இது குறித்து விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது நயன்தாரா, ஷாருகான் படத்தில் இருந்து விலகியதாக வெளியான தகவலில் துளியும் உண்மை இல்லை என்றும், அவர் படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படும் தகவலை மறுத்துள்ளது.
முதலில் ஷாருகானுக்கு ஜோடியாக நடிக்க நடிகை சமந்தாவை தான் அட்லீ அணுகினார். ஆனால் அப்போது அவர் குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணத்தில் இருந்ததால் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.